திரைப்படத்தில் மட்டுமல்ல.. நிஜத்திலும் தொழிலதிபர் தான்.. 'பிச்சைக்காரன்' நடிகையின் சக்சஸ் ஸ்டோரி..!

  • IndiaGlitz, [Sunday,February 26 2023]

விஜய் ஆண்டனி நடித்த ‘பிச்சைக்காரன்’ திரைப்படத்தில் தொழிலதிபர் கேரக்டரில் நடித்த நடிகை நிஜத்திலும் ஒரு தொழிலதிபர் என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த ‘பிச்சைக்காரன்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தில் விஜய் ஆண்டனியின் தாயாராக தீபா என்ற நடிகை நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் தீபா தொழிலதிபராக நடித்திருப்பார் என்பதும் இவர் உடல்நலம் இல்லாமல் இருப்பதன் காரணமாகத்தான் விஜய் ஆண்டனி ‘பிச்சைக்காரன்’ போல் சில நாட்கள் வாழ்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை தீபா, ரஜினியின் ‘அருணாச்சலம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் கமல்ஹாசனின் ’உத்தம வில்லன்’ பாண்டியராஜனின் ’பசங்க 2’, சிவகார்த்திகேயனின் ’ரஜினி முருகன்’ உள்பட பல திரைப்படங்கள் நடித்துள்ளார். ‘பிச்சைக்காரன்’ திரைப்படத்திற்கு பிறகு சசி இயக்கத்தில் உருவான 'சிவப்பு மஞ்சள் பச்சை’ என்ற திரைப்படத்திலும் தீபா அம்மா கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது சினிமாவிலிருந்து ஒதுங்கியுள்ள தீபா தனது கணவருடன் சேர்ந்து தொழிலதிபராகியுள்ளார். பெண்களுக்கான ஜீன்ஸ் தயாரிக்கும் தொழிலை செய்து வரும் இவர் அமெரிக்காவில் தற்போது வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் செம மாடர்னாக இருக்கும் இவரா பிச்சைக்காரன் திரைப்படத்தின் அம்மா நடிகை? என்று ஆச்சரியத்தில் ரசிகர்கள் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

More News

ஒரே ஒரு க்ளிக்.. லட்சக்கணக்கில் பணம் மோசடி.. இமான் அண்ணாச்சியின் சகோதரர்க்கு நேர்ந்த சோகம்..!

தமிழ் திரை உலகின் காமெடி நடிகர்களில் ஒருவரான இமான் அண்ணாச்சியின் சகோதரர் வங்கி கணக்கிலிருந்து லட்சக்கணக்கில் மோசடி செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

மால டம் டம்… மஞ்சர டம் டம்.. தங்கையுடன் இணைந்து செம ஆட்டம் ஆடும் இந்திய கிரிக்கெட் வீரர்..!

இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள வீரர் ஒருவர் தனது தங்கையுடன் இணைந்து மால டம் டம்… மஞ்சர டம் டம்.. என்ற பாடலுக்கு செம நடனமாடிய வீடியோ அவரது இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகிறது. 

வேற லெவல் ஹேர்ஸ்டைலில் விஜய்.. ஆங்கிலோ இந்திய பெண் போல் த்ரிஷா.. 'லியோ' லேட்டஸ்ட் ஸ்டில்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்த புகைப்படங்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றன.

ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த படத்தின் மோஷன் போஸ்டர்.. விரைவில் ரிலீஸ்..!

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'டிரைவர் ஜமுனா' 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' மற்றும் 'ரன் பேபி ரன்' ஆகிய மூன்று திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகின

குட்டை பாவாடையில் ஸ்கூல் பொண்ணு போல மாறிய லாஸ்லியா..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியா குட்டை பாவாடையில் எடுத்த ஃபோட்டோஷுட் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் இந்த பதிவுக்கு ஏராளமான கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன.