டெஸ்ட் எடுத்து ஒருவாரமாகியும் ரிசல்ட் வரவில்லை: கொரோனாவுக்கு சகோதரனை இழந்த தமிழ் நடிகை ஆதங்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
மறைந்த இயக்குனர் கேவி ஆனந்த் இயக்கிய ’கோ’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தவர் நடிகை பியா பாஜ்பாய். இவர் சமீபத்தில் தனது சகோதரர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு உதவி செய்யுமாறும் டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் அவருக்கு தேவையான சமயத்தில் உதவி கிடைக்கவில்லை என்பதால் அவருடைய சகோதரர் பரிதாபமாக பலியானார்.
இதனை அடுத்து அவர் அனைவரும் பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள் என்றும் கொரோனாவுக்கு தனது சகோதரனை இழந்துவிட்டதாகவும் டுவிட்டரில் பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் சற்று முன் அவர் பதிவு செய்துள்ள இன்னொரு டுவிட்டில் கொரோனாவால் சகோதரனை இழந்த நிலையில் எங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் ஒரு வாரம் ஆகியும் அதற்கான முடிவு இன்னும் வரவில்லை’ என்று பதிவு செய்துள்ளார். இதுகுறித்து பியா தனது டுவிட்டரில் கூறியதாவது:
மே 7-ஆம் தேதி எங்களுடைய ஒட்டுமொத்த குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை செய்தனர். ஆனால் இன்று தேதி 13 ஆகிவிட்டது, இதுவரை ரிப்போர்ட் வரவில்லை. பின் டிராப் சைலன்ஸ் ஆக உள்ளது. ஆனால் கடவுள் அருளால் எங்கள் குடும்பம் பாதுகாப்புடன் உள்ளது என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Did my full family COVID test (RT PCR) on 7th May..today is 13th n no report nothing..it’s pin drop silence..by god grace my family is safe..पर अगर result देने ही नहीं हैं तो test क्यूँ करने #Etawah
— Pia Bajpiee (@PiaBajpai) May 13, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments