டெஸ்ட் எடுத்து ஒருவாரமாகியும் ரிசல்ட் வரவில்லை: கொரோனாவுக்கு சகோதரனை இழந்த தமிழ் நடிகை ஆதங்கம்!

  • IndiaGlitz, [Thursday,May 13 2021]

மறைந்த இயக்குனர் கேவி ஆனந்த் இயக்கிய ’கோ’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தவர் நடிகை பியா பாஜ்பாய். இவர் சமீபத்தில் தனது சகோதரர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு உதவி செய்யுமாறும் டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் அவருக்கு தேவையான சமயத்தில் உதவி கிடைக்கவில்லை என்பதால் அவருடைய சகோதரர் பரிதாபமாக பலியானார்.

இதனை அடுத்து அவர் அனைவரும் பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள் என்றும் கொரோனாவுக்கு தனது சகோதரனை இழந்துவிட்டதாகவும் டுவிட்டரில் பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் சற்று முன் அவர் பதிவு செய்துள்ள இன்னொரு டுவிட்டில் கொரோனாவால் சகோதரனை இழந்த நிலையில் எங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் ஒரு வாரம் ஆகியும் அதற்கான முடிவு இன்னும் வரவில்லை’ என்று பதிவு செய்துள்ளார். இதுகுறித்து பியா தனது டுவிட்டரில் கூறியதாவது:

மே 7-ஆம் தேதி எங்களுடைய ஒட்டுமொத்த குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை செய்தனர். ஆனால் இன்று தேதி 13 ஆகிவிட்டது, இதுவரை ரிப்போர்ட் வரவில்லை. பின் டிராப் சைலன்ஸ் ஆக உள்ளது. ஆனால் கடவுள் அருளால் எங்கள் குடும்பம் பாதுகாப்புடன் உள்ளது என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

More News

'வேகத்துக்கு நான் பழசு, வெட்கத்துக்கு நான் புதுசு': டிக்டாக் இலக்கியாவின் வேற லெவல் மூவ்மெண்ட்!

டிக் டாக் மூலம் இளைஞர்கள் மத்தியில் புகழ் பெற்ற இலக்கியா, இந்தியாவில் டிக் டாக் தடை செய்யப்பட்டவுடன் மற்ற சமூக வலைதளங்களில் தன்னுடைய கிளாமரான வீடியோக்களை பதிவு செய்து

மங்கலாக இருந்தாலும் மாஸ் ஆக இருக்குது: ஷிவானியின் உச்சபட்ச கிளாமர் புகைப்படம்!

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி, அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிடும் புகைப்படங்கள் பெரும் வரவேற்ப்பை பெறும் என்பதும் அந்த புகைப்படங்களுக்கு

'சூரரைப் போற்று' படத்திற்கு கிடைத்த மற்றொரு சர்வதேச அங்கீகாரம்!

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகிய 'சூரரைப்போற்று' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் ஓடிடியில் வெளியாகி அதிக பார்வையாளர்கள்

கொரோனா பாதிப்பால் பலியான இன்னொரு தமிழ் திரையுலக பிரபலம்!

தமிழகத்தில் தினமும் 30 ஆயிரத்துக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர் என்பதையும் அதிர்ச்சியுடன் பார்த்து வருகிறோம்

மாட்டுச் சாணத்தில் குளித்தால் என்ன நடக்கும்? வைரல் வீடியோவை தொடர்ந்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

மாட்டுச்சாணம் மற்றும் கோமியம் ஒரு கிருமிநாசினியாக பயன்படும் என்ற நம்பிக்கை இந்தியா முழுவதும் பொதுவாகவே இருந்து வருகிறது.