உதயநிதி-மிஷ்கின் படத்தின் டைட்டில் குறித்த தகவல்

  • IndiaGlitz, [Tuesday,September 04 2018]

விஷால் நடித்த 'துப்பறிவாளன்' படத்திற்கு பின்னர் மிஷ்கின் இயக்கும் அடுத்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு 'சைக்கோ' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், டைட்டில் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது

முதல்முறையாக மிஷ்கின் மற்றும் உதயநிதி இணையும் இந்த படத்தின் நாயகியாக 'காற்று வெளியிடை' நாயகி அதிதிராவ் ஹைத்தி நடிக்கவுள்ளார். இசைஞானி இளையராஜா இசையில் பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படத்தை ரெட்ஜெய்ண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

மேலும் இந்த படத்தில் நித்யாமேனன் ஒருமுக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கவுள்ளது.