கொரோனா அச்சம்!!!10 ஆயிரம் சிறை கைதிகளை வீட்டிற்கு அனுப்பிய பிலிப்பைன்ஸ்!!!

  • IndiaGlitz, [Saturday,May 02 2020]

 

கொரோனா பரவல் தடுப்புக்காக உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. உலகில் பல்வேறு நாடுகளின் சிறைகளிலும் கொரோனா நோய்த்தொற்று பரவிவரும் சூழலில் பிலிப்பைன்ஸ் நாடு நெருக்கமான சிறைகளில் உள்ள 10 ஆயிரம் சிறை கைதிகளை விடுவித்து இருக்கிறது.

கொரோனாவுக்கு எதிரான செயல்பாடுகளில் பிலிப்பைன்ஸ் 10 ஆயிரம் சிறை கைதிகளை விடுவித்து உள்ளதாக அந்நாட்டின் உச்ச நீதிமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நெருக்கமான சூழல்களில் அடைக்கப்பட்டுள்ள சிறை கைதிகளை விடுவிடுக்கும்படி அந்நாட்டின் நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில் தற்போது கைதிகள் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. விடுவிக்கப்பட்ட கைதிகள் பெரும்பாலும் 6 மாதத் தண்டனைக்கு குறைவான தண்டனையைப் பெற்றவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. தகுதிவாய்ந்த முதியவர்கள் மற்றும் நோய் வாய்ப்பட்ட கைதிகளும் விடுவிக்கப் பட்டுள்ளார்கள்.

மார்ச் 17 ஆம் தேதி முதல் ஏப்ரல் 29 வரை படிப்படியாக சிறை கைதிகள் விடுவிக்கப்பட்டதாகவும் அந்நாட்டு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. உள்கட்டமைப்பு வசதி குறைந்த பல சிறைகளில் நெருக்கமான எண்ணிக்கையில் கைதிகள் அடைக்கப்பட்டள்ளனர். எனவே சிறைச்சாலைகளில் உடல் ரிதியான சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் என்பது சாத்தியமே இல்லை என்பதால் தற்போது பல நாடுகள் தங்களது சிறை கைதிகளை விடுவித்து வருகின்றனர். பிலிப்பைன்ஸின் சில சிறைச்சாலைகளில் மட்டுமே கொரோனா பாதிப்பு பதிவாகியிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள கியூசன் சிட்டி சிறைச்சாலை கூட்டம் மற்றும் நெரிசலானதாகவும் கருதப்படுகிறது. அந்நாட்டில் உள்ள செபு தீவில் 348 சிறை கைதிகளுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

வடதுருவ ஓசோன் படலத்தில் இருந்த ஓட்டை தானாக மூடிக்கொண்டது!!! அறிவியல் காரணங்கள் என்ன???

மனிதர்கள் ஏற்படுத்திய கடுமையான மாசுபாட்டால் பூமியின் வடதுருவத்தில் உள்ள ஓசோன் படலம் பாதிக்கப்பட்டு மிகப்பெரிய ஓட்டையை உண்டாகியிருந்தது.

இன்றும் 200க்கும் மேல் தாண்டிய கொரோனா பாதிப்பு: சென்னையில் எத்தனை பேர்?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 100க்கும் அதிகமாகவும் நேற்று 200க்கும் அதிகமாகவும் கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று தமிழகத்தில் 231 பேர்களுக்கு புதியதாக கொரோனா தொற்று

இதுதாண்டா மரண மாஸ்க்!

சென்னை உள்பட தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து கொண்டே இருப்பதால் தகுந்த காரணம் இல்லாமல் பொதுமக்கள் வெளியே வரக்கூடாது என்றும் அத்தியாவசிய காரணத்தால் வெளியே வந்தால்

பிக்பாஸ் தமிழ் நடிகை பாடிய முதல் பாடல்: இணையத்தில் வைரல்

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் தமிழ் நடிகையுமான ஜனனி ஐயர் பாடிய முதல் பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

புது வரவு ஹுண்டாய் வெர்னா!!! எப்படியிருக்கும்???

டீசல் கார்களில் முன்னிலையில் இருக்கும் ஹோண்டாய் நிறுவனம் தற்போது தனது வரவை அறிமுகப்படுத்தி இருக்கிறது.