முறிந்த காதல்… இளம்பெண்ணின் அசால்ட் செயலுக்கு மில்லியன் கணக்கில் குவியும் லைக்ஸ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
காதல் முறிந்த நிலையில் கையை அறுத்துக் கொள்வது, தற்கொலை செய்து கொள்வது போன்ற மடத்தனமான காரியங்களை செய்து கொண்டு இருக்கும் இளைஞர்களுக்கு மத்தியில் இளம்பெண் ஒருவர் வித்தியாசமான ஒரு காரியத்தை செய்து மற்றவர்களையும் ஆச்சர்யப்பட வைத்து இருக்கிறார்.
தெற்கு கலிபோர்னியா நகரான லாஜ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்தவர் Kessie yeung(23). கொரோனா நேரத்தில் இவருடைய காதல் முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் அந்த மனிதரைப் பற்றிய எந்த நினைவுகளும் எனக்கு இருக்கக்கூடாது என முடிவெடுத்து இருக்கிறார். இதற்காக கலிபோர்னியாவில் இருந்து தென்கொரியாவிற்கு கிட்டத்தட்ட 6 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து காதலர்களாக இருந்தபோது ஏற்படுத்திய தங்களது காதல் நினைவுச் சின்னத்தை சுக்கு நூறாக உடைத்து இருக்கிறார்.
இந்தச் செயல்தான் தற்போது சமூக வலைத்தளத்தில் பலரையும் ஆச்சர்யப்பட வைத்து இருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பு கேசி தென்கொரியாவின் தலைநகர் சியோலில் உள்ள நம்சன் டவருக்கு தனது காதலரோடு சென்று இருக்கிறார். மேலும் தங்களது காதலுக்கு அடையாளமாக (லவ் லாக்) ஒரு பூட்டை வாங்கி மாட்டி இருக்கிறார்.
தற்போது தனது காதல் முறிந்த நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து தென்கொரியாவிற்கு 5,953 கிமீ பயணம் செய்து நம்சன் டவரில் தொங்கிய ஆயிரக்கணக்கான பூட்டுகளுக்கு மத்தியில் தனது பூட்டை தேடி கண்டுபிடித்து உடைத்தச் சம்பவம் பலரையும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது. இந்த பயணம் முழுவதையும் கேசி வீடியோவாக எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார். இதைப் பார்த்த நெட்டிசகன் “நான் கூட பிரான்சில் ஒன்றை விட்டு விட்டு வந்து விட்டேன்“, “இதொரு குயின் செயல்“ என்பது போன்ற கமெண்டுகளைப் பதிவிட்டு வருகின்றனர். மேலும் கேசியின் இந்த வீடியோவிற்கு 5 மில்லியன்களைத் தாண்டி லைக்ஸ் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments