சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'பேட்ட' ரன்னிங் டைம் குறித்த தகவல்

  • IndiaGlitz, [Monday,December 24 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் இந்த படம் சமீபத்தில் 'யூஏ' சான்றிதழை சென்சாரிடம் இருந்து பெற்றது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை பெற்ற நிறுவனத்தின் தகவலின்படி இந்த படம் 172 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 52 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்ட படமாக உள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் நீளம் கொஞ்சம் அதிகம் என்றாலும் ரஜினியை ரசிக்கும் வகையில் கார்த்திக் சுப்புராஜ் படமாக்கியிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதால் நீளமான ரன்னிங் டைம் பிளஸ்ஸாகவே இருக்க வாய்ப்பு உள்ளது.

மேலும் தமிழகம் தவிர மற்ற மாநில உரிமைகளை பெற்ற விநியோகிஸ்தர்களின் தகவலின்படி இந்த படம் ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளிவரவுள்ளது.

 

More News

க்ரைம் த்ரில்லர் படம் இயக்க கூடாது: மிஷ்கினுக்கு சென்னை ஐகோர்ட் தடை

பிரபல இயக்குனர் மிஷ்கின் அவர்கள் க்ரைம் த்ரில்லர் வகையிலான படங்களை இயக்க கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் கூறிய 'பக்ரீத்' படக்குழு

உலகம் முழுவதும் நாளை கிறிஸ்துமஸ் திருவிழா சிறப்பாக கொண்டாடவிருக்கும் நிலையில் 'பக்ரீத்' படக்குழுவினர் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை புதிய போஸ்டர் ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளனர்.

சிம்பு பட பிரச்சனை: காவல் ஆணையரிடம் டி.ராஜேந்தர் திடீர் புகார்

சிம்பு, ஜோதிகா நடிப்பில் சிம்பு இயக்கிய திரைப்படம் 'மன்மதன்'. இந்த படம் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தின் காப்புரிமை குறித்த புகார் ஒன்றை டி.ராஜேந்தர் காவல்துறை ஆணையரிடம் .

'விஸ்வாசம்' படத்தின் சென்சார் தகவல்: பொங்கல் ரிலீஸ் உறுதி

'விஸ்வாசம்' திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் என்று படக்குழுவினர் ஏற்கனவே பலமுறை உறுதி செய்த நிலையில் இன்று இந்த படத்தை சென்சார் அதிகாரிகள் பார்த்து படத்திற்கு 'யூ' சான்றிதழ் கொடுத்துள்ளனர்

காதலருடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு தயாரான நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு இந்த ஆண்டு அவரது திரையுலக வாழ்க்கையில் வெற்றிகரமான ஆண்டு என்றே சொல்ல வேண்டும்.