'பேட்ட', 'விஸ்வாசம்' ரிலீஸ் நாளில் ஐஸ்வர்யா ராஜேஷின் கனெக்சன்

  • IndiaGlitz, [Thursday,December 27 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' மற்றும் தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் வரும் ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவிக்கவேண்டியது ஒன்றுதான் பாக்கி

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான சூப்பர் ஹிட் படமான 'கனா' படத்தில் தனது முழு திறமையையும் நிரூபித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தனது சமூக வலைத்தள பக்கத்தில் 'ஜனவரி 10' என்ற ஒரே ஒரு வார்த்தையை மட்டும் பதிவு செய்துள்ளார்.

பேட்ட' மற்றும் 'விஸ்வாசம்' படத்தின் ரிலீஸ் தேதியை அவர் குறிப்பிடுவதாக பெரும்பாலான ரசிகர்கள் இதுகுறித்து பதிவு செய்து வரும் நிலையில் அதே ஜனவரி 10 தான் ஐஸ்வர்யா ராஜேஷின் பிறந்த நாள் என்பதும் அதைத்தான் அவர் மறைமுகமாக குறிப்பிட்டிருப்பார் என்றும் கூறப்படுகிறது. எனவே ஜனவரி 10ஆம் தேதி 'பேட்ட', விஸ்வாசம் கொண்டாட்டத்தோடு ஐஸ்வர்யா ராஜேஷின் பிறந்த நாள் கொண்டாட்டமும் சமூக வலைத்தளங்களில் ஜோராக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

நடிகை மடோனாவின் காதலர் ஒரு இசையமைப்பாளரா?

'பிரேமம்' படத்தில் செலின் என்ற கேரக்டரில் நடித்ததன் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமான நடிகை மடோனா செபாஸ்டியன்,

'தளபதி 63' படம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்டாரா விஜய்?

'சர்கார்' படத்திற்கு பின் அட்லி இயக்கத்தில் உருவாகவுள்ள 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரியில் தொடங்கவுள்ள நிலையில் தற்போது அவர் தனக்கு நெருக்கமானவர்களை சந்தித்து வருகிறார்.

சீமான் - சிம்பு இணையும் புதிய படம் குறித்த தகவல்

இயக்குனரும் நடிகருமான சீமான் கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் பிசியாக இருப்பதால் திரைப்படங்களில் நடிப்பதையும் இயக்குவதையும் குறைத்து கொண்டார்.

உலகை உலுக்கும் கேள்வி! 'சர்வம் தாளமயம்' குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சர்வம் தாளமயம்' திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாகும்

பாலாவின் 'வர்மா' படத்தை ரிலீஸ் செய்யும் பிரபல நிறுவனம்

பாலா இயக்கத்தில் சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்த 'வர்மா திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிந்து சென்சாருக்கும் சென்று வந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.