ரஜினியின் 'பேட்ட': இன்று மாலை 6 மணிக்கு மாஸ் அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,December 04 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'பேட்ட' திரைப்படத்தின் மரணமாஸ் தலைவர் குத்து பாடல் நேற்று மாலை வெளியாகி இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்தது. அனிருத் இசையில் உருவான இந்த குத்து பாடல் 'பாட்ஷாவின் 'ஆட்டோக்காரன்' பாடலை அடுத்து பட்டிதொட்டியெங்கும் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் இன்று மாலை இந்த படம் குறித்த ஒரு மாஸ் அறிவிப்பு வரவுள்ளது. இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்திருப்பதாக கூறப்படும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் கேரக்டர் பெயர் மற்றும் தோற்றம் குறித்த போஸ்டர் வெளிவரவுள்ளது. இதனையடுத்து விஜய்சேதுபதி ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் 'பேட்ட' படத்தில் ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, விஜய்சேதுபதி, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், சசிகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

 

More News

கிறிஸ்துமஸ் திரைப்படங்கள் எவை எவை?

பொங்கல், தீபாவளியை அடுத்து பெரிய நட்சத்திரங்களின் படங்கள் அதிகமாக வெளியாகும் தினம் கிறிஸ்துமஸ் திருநாள். இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் திருநாளிலும் வழக்கம்போல் திரைப்படங்கள் ரிலீசுக்கு குவிந்துள்ளது.

தன்னை தானே உணர்ந்த மிகப்பெரிய ஞானி பாரதி: ரஜினி புகழாரம்

மகாகவி பாரதியாரின் 136வது பிறந்த நாள் கொண்டாட்டம் தமிழகம் முழுவதும் நடந்து வரும் நிலையில் பாரதியாரின் சிறப்புகள் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியவை இதோ:

'மாரி 2' ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்த தனுஷ்

தனுஷ் நடித்த 'மாரி 2' திரைப்படம் கடந்த சில நாட்களாக டிசம்பர் வெளியீடு என்று அறிவிக்கப்பட்டு வந்தாலும் சரியான ரிலீஸ் தேதி குறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிக்காமல் இருந்தது

பிரியங்கா சோப்ரா திருமணத்திற்கு பீட்டா தெரிவித்த அதிருப்தி

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது நீண்டநாள் காதலரும் அமெரிக்காவின் பிரபல பாடகருமான நிக் ஜோன்ஸை கடந்த ஞாயிறு அன்று திருமணம் செய்து கொண்டார்.

உலகின் மிகப்பெரிய திரையரங்கில் '2.0' செய்த சாதனை

கிராண்ட் ரெக்ஸ் என்ற இந்த திரையரங்கில் ஹாலிவுட் படங்கள் மட்டுமே திரையிடப்பட்டு வந்த நிலையில் முதன்முதலாக வெளியான தமிழ்ப்படம் என்ற பெருமையை பெற்றது சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' திரைப்படம்