சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'பேட்ட' டிரைலர் ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Tuesday,December 25 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் சென்சார் பணிகள் உள்பட அனைத்து பணிகளும் முடிவடைந்து வரும் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆக தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் ஜெட் வேகத்தில் நடந்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பேட்ட' படத்தின் டிரைலர் வரும் 28ஆம் தேதி வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகி பட்டிதொட்டியெங்கும் பரவியுள்ள நிலையில் டிரைலரும் இணையதளத்தில் பல சாதனைகளை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, விஜய்சேதுபதி, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், சசிகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் 2019ஆம் ஆண்டின் முதல் மாஸ் ஹிட் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

விஜய்க்காக ரிஸ்க் எடுக்கும் சாய்பல்லவி

நடிகை சாய்பல்லவியை இன்னும் மலர் டீச்சராகவே பலர் நினைத்து வருகின்றனர். அந்த கேரக்டர் மீதான மரியாதை காரணமாக சாய்பல்லவி தென்னிந்தியா முழுவதும் பிரபலமானார்.

கார்த்தியின் 'தேவ்' இசை வெளியீடு தேதி அறிவிப்பு

'தீரன் அதிகாரம் ஒன்று', 'கடைக்குட்டி சிங்கம்' ஆகிய இரண்டு வெற்றி படங்களை அடுத்து கார்த்தி நடித்து வரும் திரைப்படம் 'தேவ்'. இந்த படத்தின் சிங்கிள் பாடலான 'அனங்கே சிணுங்கலாமா?

எம்.எல்.ஏ மீது நடிகை போலீஸ் புகார்

தெலுங்கு நடிகை அபூர்வா, தெலுங்கு தேச எம்.எல்.ஏ ஒருவர் மீது புகார் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மக்கள் திலகம் எம்ஜிஆர் குறித்து அரிய தகவல்கள்: நடிகர் ராஜேஷ்

மக்கள் திலகம் எம்ஜிஆர் நினைவு தினம் நேற்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்ட நிலையில் நடிகர் ராஜேஷ், எம்ஜிஆர் குறித்த சில அரிய தகவல்களை கூறியுள்ளார்.

துருவ் விக்ரமின் 'வர்மா' ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சீயான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் இயக்குனர் பாலா இயக்கிய 'வர்மா' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.