ரஜினி பிறந்த நாளில் படக்குழுவினர் தரும் விருந்து இதுதான்

  • IndiaGlitz, [Tuesday,December 11 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக அவரது ரசிகர்களுக்கு வெளிவரவுள்ள நிலையில் நாளை வழக்கம்போல் ரஜினி பிறந்த நாளை கொண்டாடவும் ரசிகர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

இந்த நிலையில் நாளை ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு 'பேட்ட' படத்தின் டீசரை வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு ரஜினி ரசிகர்களுக்கான பிறந்த நாள் விருந்தாக கருதப்படுகிறது.

ஏற்கனவே 'பேட்ட' படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகி சமூக வலைத்தளங்களில் இன்னும் டிரண்டில் இருந்து வரும் நிலையில் தற்போது மீண்டும் அவை அதிரும் வகையில் டீசர் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டீசர் ஏற்கனவே செய்த சாதனைகளை முறியடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.