close
Choose your channels

ரஜினியின் 'பேட்ட' செகண்ட் சிங்கிள் குறித்த முக்கிய தகவல்

Thursday, December 6, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'மரண மாஸ்' தலைவர் குத்து பாடல் சமீபத்தில் வெளிவந்து பட்டிதொட்டியெங்கும் பரவியது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் நாளை இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகவுள்ளது. அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் 'உல்லால்லா' என்று ஆரம்பிக்கவுள்ளதாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சற்றுமுன் அறிவித்து சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஸ்டில் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

சுற்றிலும் இளைஞர்கள் சூழ, ஸ்டைலாக நடனம் ஆடும் ரஜினியின் இந்த ஸ்டில் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது. 2.0 படத்திற்கு முந்தைய இரண்டு ரஜினி படங்களும் ரசிகர்களை திருப்தி செய்யாத நிலையில் ஒரு தீவிர ரஜினி ரசிகரே இயக்கியுள்ள படம் என்பதால் 'பேட்ட' படத்தின் ஒவ்வொரு ஸ்டில்லும் பட்டையை கிளப்பி வருகிறது.

ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா, நவாசுதீன் சித்திக் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment