close
Choose your channels

இன்று வெளியாகும் 'பேட்ட' உல்லல்லா பாடலை பாடியவர் இவர்தான்

Friday, December 7, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'பேட்ட' திரைப்படத்தின் புரமோஷன் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில் இன்று இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான உல்லல்லா என்ற பாடல் வெளியாகவுள்ளது.

முதல் சிங்கிள் பாடலான மரணமாஸ் பாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால் தலைவருக்காக அனிருத் கம்போஸ் செய்துள்ள இந்த பாடலுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த பாடலை பாடகர் இன்னொ கெங்கா என்பவர் பாடியுள்ள செய்தி தற்போது கிடைத்துள்ளது. இந்த செய்தியை இன்னோ கெங்கா தனது சமூக வலைத்தளத்தில் உறுதியும் செய்துள்ளார்.

தலைவர் படமான 'பேட்ட' படத்தில் உல்லல்லா பாடியது நான் தான். எனது சகோதரர் அனிருத்துக்கு மிகப்பெரிய நன்றி. என்னுடைய சிறுவயது கனவு தற்போது நிறைவேறியுள்ளது என்று இன்னொ கெங்கா கூறியுள்ளார்.

பாடகர் இன்னொ கெங்கா ஏற்கனவே 'கோ 2', 'ரெமோ', 'கவலை வேண்டாம்', 'போகன்' 'தீரன் அதிகாரம் ஒன்று' மற்றும் 'குலேபகாவலி' ஆகிய படங்களில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment