இன்று வெளியாகும் 'பேட்ட' உல்லல்லா பாடலை பாடியவர் இவர்தான்

  • IndiaGlitz, [Friday,December 07 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'பேட்ட' திரைப்படத்தின் புரமோஷன் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில் இன்று இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான உல்லல்லா என்ற பாடல் வெளியாகவுள்ளது.

முதல் சிங்கிள் பாடலான மரணமாஸ் பாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால் தலைவருக்காக அனிருத் கம்போஸ் செய்துள்ள இந்த பாடலுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த பாடலை பாடகர் இன்னொ கெங்கா என்பவர் பாடியுள்ள செய்தி தற்போது கிடைத்துள்ளது. இந்த செய்தியை இன்னோ கெங்கா தனது சமூக வலைத்தளத்தில் உறுதியும் செய்துள்ளார்.

தலைவர் படமான 'பேட்ட' படத்தில் உல்லல்லா பாடியது நான் தான். எனது சகோதரர் அனிருத்துக்கு மிகப்பெரிய நன்றி. என்னுடைய சிறுவயது கனவு தற்போது நிறைவேறியுள்ளது என்று இன்னொ கெங்கா கூறியுள்ளார்.

பாடகர் இன்னொ கெங்கா ஏற்கனவே 'கோ 2', 'ரெமோ', 'கவலை வேண்டாம்', 'போகன்' 'தீரன் அதிகாரம் ஒன்று' மற்றும் 'குலேபகாவலி' ஆகிய படங்களில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

ரஜினி, கமலுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு

ஜெயலலிதா மற்றும் கருணாநிதி மறைந்த பின்னர் தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாகவும், அந்த வெற்றிடத்தை நிரப்ப ரஜினி மற்றும் கமல் அரசியலில் குதித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

விதையாய் இருந்தவரை இழந்து விட்டோம்: நெல் ஜெயராமன் மறைவு குறித்து விஷால்

மரபணு மாற்றம் செய்யும் விதைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுத்த சாதனை விவசாயி நெல் ஜெயராமன் இன்று காலை காலமானார்.

அஜித்தை அடுத்து ரஜினியுடன் மோதும் விஜய்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டால் அந்த தேதிக்கு முந்தைய வாரமும், பிந்தைய வாரமும் எந்த பெரிய படமும் வெளியாகாது.

ரஜினியின் 'பேட்ட' செகண்ட் சிங்கிள் குறித்த முக்கிய தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'மரண மாஸ் தலைவர் குத்து பாடல் சமீபத்தில் வெளிவந்து பட்டிதொட்டியெங்கும் பரவியது என்பது தெரிந்ததே

ரஜினி பிறந்த நாளில் 'பேட்ட' படக்குழுவினர் தரும் இன்ப அதிர்ச்சி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் ஒருபக்கம் ரூ.500 கோடி வசூல் செய்து பட்டையை கிளப்பி வருகிறது