'ரஜினியின் 'பேட்ட' செகண்ட் லுக் இதுதான்

  • IndiaGlitz, [Thursday,October 04 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'பேட்ட' படத்தின் செகண்ட் லுக் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகவுள்ளதாக வெளிவந்த அறிவிப்பு குறித்து சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் செகண்ட் லுக் சற்றுமுன் இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இந்த செகண்ட் லுக்கில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டையில் விபூதி, குங்குமம் வைத்து அவருக்கே உரிய புன்சிரிப்புடன் அதே நேரத்தில் பெரிய மீசையுடன் காட்சி தருகிறார். மேலும் இந்த செகண்ட் லுக்கில் ரஜினிகாந்த் இளமையான தோற்றத்தில் இருப்பதால் அனேகமாக இந்த கெட்டப் பிளாஷ் காட்சிக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

தாதா வேடத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சிம்ரன், த்ரிஷா நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் விஜய்சேதுபதி, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், சசிகுமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார்.