ரஜினியின் 'பேட்ட' படம் குறித்த முக்கிய அப்டேட்: கார்த்திக் சுப்புராஜ் அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,October 04 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் 'பேட்ட' படத்தின் படப்பிடிப்பு வாரணாசி அருகே தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் அடுத்த மாதம் முடிந்துவிடும் என்றும் பொங்கல் தினத்தில் இந்த படம் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் 'பேட்ட' படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளியாகி உலக அளவில் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆனது தெரிந்ததே. இதனையடுத்து இன்று இரவு 7 மணிக்கு இந்த படத்தின் செகண்ட் லுக் வெளியாகும் என இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அறிவித்துள்ளார்.

இந்த செய்தி வெளீயாகி ஒருசில நிமிடங்கள் கூட ஆகவில்லை ஆனால் அதற்குள் #PettaSecondLook என்ற ஹேஷ்டேக் சமூக இணையதளத்தில் டிரெண்டுக்கு வந்துவிட்டது. இன்னும் ஒருசில நிமிடங்களில் பேட்ட' படத்தின் செகண்ட் லுக்கை பார்ப்போம்

More News

நாளை முதல் 'விஸ்வாசம்' திருவிழா ஆரம்பம்?

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'விஸ்வாசம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில்

10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: 3 பேருக்கு தூக்கு தண்டனை

தேனி அருகே 5ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்த 10 வயது சிறுமியை மூன்று பேர் கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் மூவருக்கும் தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது.

கமல் வைத்த பார்ட்டியில் யாஷிகா-ஐஸ்வர்யா கலந்து கொள்ளாதது ஏன்?

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிறுடன் முடிவடைந்து அதில் ரித்விகா டைட்டில் வின்னராக தேர்வு பெற்றார் என்பது தெரிந்ததே. ஐஸ்வர்யாவுக்கு இரண்டாமிடமும் விஜயலட்சுமிக்கு மூன்றாவது இடமும் கிடைத்தது.

பாராளுமன்ற தேர்தலில் ரஜினிக்கு எத்தனை தொகுதி? ரிபப்ளிக் டிவி கருத்துக்கணிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க அனைத்து ஆரம்பகட்ட பணிகளையும் செய்து வரும் நிலையில் அவருடைய ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளின் நியமனம் முடிவடைந்துள்ளது.

தமிழகத்தில் கனமழை: தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

தமிழகத்தில் வரும் 7ஆம் தேதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ள நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் என்ன சொல்கிறார் என்பதை பார்ப்போம்