மலேசியாவைக் கலக்கும் 'பேட்ட' பேரணி
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் வரும் 10ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் தியேட்டர் புக்கிங் பணிகள் முடிந்து ஒருசில திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கிவிட்டதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டாரின் ஒவ்வொரு படத்திற்கும் மலேசியாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு வரும் நிலையில் இந்த படத்திற்கு மலேசியாவில் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்று, பேட்ட ஸ்டிக்கர் ஒட்டிய கார்களின் அணிவகுப்பை மலேசியாவில் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேட்ட ஸ்டிக்கருடன் வலம் வந்த கார்களின் அணிவகுப்பு குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, விஜய்சேதுபதி, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், சசிகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வசூலில் மிகப்பெரிய சாதனை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#Malaysia Idhu Veralevel Promotion'a irukku?? @malikstreams Nice.... @karthiksubbaraj #SuperStar pic.twitter.com/rc1A4HtVEa
— KRISH (@krishoffl) January 2, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments