'பேட்ட' இசை வெளீயீடு: முக்கியமானதை மறந்த கார்த்திக் சுப்புராஜ்

  • IndiaGlitz, [Saturday,November 24 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' வரும் 29ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் ஒன்றரை மாத இடைவெளியில் அவர் நடித்துள்ள இன்னொரு படமான 'பேட்ட' வரும் பொங்கல் தினத்தில் வெளிவரவுள்ளது.

'பேட்ட' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது சுறுசுறுப்பாக போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக், செகண்ட்லுக் மற்றும் இசை வெளீயீட்டு தேதிகளை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அறிவித்துள்ளார்.

அனிருத் இசையில் உருவான இந்த படத்தின் முதல் சிங்கிள் வரும் டிசம்பர் 3ஆம் தேதியும், அதனையடுத்து செகண்ட் சிங்கிள் டிசம்பர் 7ஆம் தேதியும் அனைத்து பாடல்களும் வரும் டிசம்பர் 9ஆம் தேதியும் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பில் 'பேட்ட' படம் பொங்கல் ரிலீஸ் என்றா அறிவிப்பை தான் மறந்துவிட்டதாகவும், அதனை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துவதாகவும் கார்த்திக் சுப்புராஜ் தனது அடுத்த டுவிட்டீல் பதிவு செய்துள்ளார்.

ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, விஜய்சேதுபதி, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், சசிகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது

 

More News

சிவகார்த்திகேயனின் 'கனா' படம் குறித்த முக்கிய அறிவிப்பு

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள முதல் படமான 'கனா' திரைப்படம் பெண்கள் கிரிக்கெட் குறித்த கதையம்சத்தில் உருவாகியுள்ள நிலையில் இந்த படம் வரும் டிசம்பரில் வெளியாகும்

குரலே இல்லாதவங்க கேள்வி கேட்கணும்ன்னா...'வெல்வெட் நகரம்' டிரைலர் விமர்சனம்

நடிகை வரலட்சுமி நடித்த 'வெல்வெட் நகரம்' படத்தின் டிரைலரை சற்றுமுன் நடிகர் தனுஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ரஜினிகாந்த் உடல்நிலைக்கு என்ன ஆச்சு? திடீரென பரவும் வதந்தியால் பரபரப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து திடீரென சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையதளங்களில் வதந்தி பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒருநாள் இரவுக்கு அழைத்த வாலிபரை ஒரே நிமிடத்தில் பிரபலமாக்கிய நடிகை

வாட்ஸ் மூலம் பிரபல நடிகை ஒருவரை ஒருநாள் இரவுக்கு அழைத்த வாலிபர் ஒருவரை அந்த நடிகை உலகிற்கே அடையாளம் காட்டி பிரபலமாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நான் வாசிச்ச பிறகுதான் தளபதி படமே ரிலீஸ் ஆகும்: சர்வம் தாளமயம் டீசர் விமர்சனம்

ஜிவி பிரகாஷ் நடிப்பில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியிருக்கும் 'சர்வம் தாளமயம்' திரைப்படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.