'பேட்ட', 'விஸ்வாசம்' விவகாரம்: இரண்டு மாநகராட்சி ஊழியர்கள் சஸ்பெண்ட்

  • IndiaGlitz, [Monday,January 21 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' மற்றும் தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் கடந்த பொங்கல் விருந்தாக வெளியாகி இரண்டு படங்களுமே ரூ.100 கோடிக்கும் அதிக வசூலை பெற்று வெற்றிப்படங்கள் பட்டியலில் இணைந்துள்ளது,

இந்த நிலையில் விஸ்வாசம் ,பேட்ட ஆகிய படங்களுக்கு அதிக கட்டணம் வசூல் செய்ய கூடாது என்று நீதிமன்றம் வழக்கு ஒன்றில் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து, இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தது

ஆனால் வழக்கம்போல் இந்த இரண்டு படங்களுக்கும் அரசு நிர்ணயித்த கட்டணங்களைவிட அதிக கட்டணங்கள் திரையரங்குகள் வசூல் செய்ததால், நீதிமன்றத்தின் இந்த உத்தரவை செயல்படுத்தாத மாநகராட்சி ஊழியர் இருவரை பணியிடை நீக்கம் செய்து, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மதுரை மாநகராட்சி ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் ஜனவரி 10 முதல் 17 வரை பேட்ட, விஸ்வாசம் படங்கள் வெளியான திரையரங்குகளின் DCR அறிக்கை ( Daily Collection Report) தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

 

 

More News

ஐஸ்வர்யா தத்தா, வரலட்சுமி உள்பட ஒரே 4 நடிகைகள் நடிக்கும் படம்

பிக்பாஸ் புகழ் நடிகை ஐஸ்வர்யா தத்தா, வரலட்சுமி சரத்குமார், ஆஷ்னா ஜாவேரி மற்றும் சுபிக்சா என நான்கு முன்னணி நடிகைகள் நடிக்கும் படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

10 வருட சேலஞ்ச்: பிக்பாஸ் ரம்யாவின் 60 கிலோ மாற்றம்

கடந்த சில நாட்களாக 10 வருட சேலஞ்ச் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது தெரிந்ததே.

தனுஷை பாராட்டி சிக்கலில் மாட்டிக் கொண்ட நடிகை ரம்யா!

தனுஷ் நடிப்பில் வெளியான 'மாரி 2' படம் அவரது ரசிகர்களை மட்டுமே திருப்தி செய்திருந்தாலும், அந்த படத்தில் இடம்பெற்ற 'ரெளடி பேபி பாடல் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் சாதனை செய்தது

இரண்டாம் பாகமாகும் ஷங்கரின் இன்னொரு படம்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய 'எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகமான '2.0' சமீபத்தில் வெளியாகி சூப்பர்ஹிட் ஆகிய நிலையில் அவர் தற்போது 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பில் விறுவிறுப்பாக உள்ளார்.

மக்களுக்காக உழைக்கும் தலைவரை தேடுறேன்: கமல், ரஜினி அரசியல் குறித்து நடிகை கவுதமி

பிரபல நடிகை கவுதமி கடந்த சில ஆண்டுகளாக பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடந்த 2016ஆம் ஆண்டு பிரதமரை சந்தித்த கவுதமி,