'பேட்ட', 'விஸ்வாசம்' விவகாரம்: இரண்டு மாநகராட்சி ஊழியர்கள் சஸ்பெண்ட்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' மற்றும் தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் கடந்த பொங்கல் விருந்தாக வெளியாகி இரண்டு படங்களுமே ரூ.100 கோடிக்கும் அதிக வசூலை பெற்று வெற்றிப்படங்கள் பட்டியலில் இணைந்துள்ளது,
இந்த நிலையில் விஸ்வாசம் ,பேட்ட ஆகிய படங்களுக்கு அதிக கட்டணம் வசூல் செய்ய கூடாது என்று நீதிமன்றம் வழக்கு ஒன்றில் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து, இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தது
ஆனால் வழக்கம்போல் இந்த இரண்டு படங்களுக்கும் அரசு நிர்ணயித்த கட்டணங்களைவிட அதிக கட்டணங்கள் திரையரங்குகள் வசூல் செய்ததால், நீதிமன்றத்தின் இந்த உத்தரவை செயல்படுத்தாத மாநகராட்சி ஊழியர் இருவரை பணியிடை நீக்கம் செய்து, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மதுரை மாநகராட்சி ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் ஜனவரி 10 முதல் 17 வரை பேட்ட, விஸ்வாசம் படங்கள் வெளியான திரையரங்குகளின் DCR அறிக்கை ( Daily Collection Report) தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout