'பேட்ட' நடிகரின் திருமணத்தில் திடீர் மாற்றம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ’பேட்ட’ திரைப்படத்தில் ஒரு சிறு கேரக்டரில் நடித்தவர் மணிகண்டன் ஆச்சாரி. இவர் மலையாளத்தில் பிரபல நடிகர் என்பதும் சமீபத்தில் வெளிவந்த ’கம்மாட்டிபாடம்’ என்ற மலையாள படத்தில் இவர் சிறப்பாக நடித்ததற்காக மாநில விருதைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் மணிகண்டன் ஆச்சாரிக்கும் அஞ்சலி என்ற பெண்ணுக்கும் வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி திருமணம் மிகவும் சிறப்பாக நடைபெற இருந்தது. மிகவும் பிரம்மாண்டமாக அனைத்து திரையுலக பிரபலங்களையும் அழைத்து திருமணத்தை நடத்த மணிகண்டன் முடிவு செய்திருந்த நிலையில் தற்போது உள்ள சூழ்நிலையில் கணக்கில் கொண்டு தனது திருமணத்தில் திடீர் மாற்றம் செய்துள்ளார்.
ஏப்ரல் 26ஆம் தேதி திட்டமிட்டபடி திருமணம் நடக்கும் என்றும் ஆனால் இந்த திருமணம் ஆடம்பரமின்றி இரு குடும்பத்தாரின் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் மிக எளிமையாக நடத்த முடிவு செய்திருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார். தற்போது இருக்கும் சூழலில் தனக்கு இருக்கும் சமூக பொறுப்பு காரணமாக திருமண விழாவில் கூட்டம் கூட்ட விரும்பவில்லை என்றும், திருமணத்தை எளிமையாக நடத்த முடிவு செய்து இருப்பதாகவும் இதற்கு மணமகள் வீட்டாரும் ஒப்புக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மணிகண்டன் ஆச்சாரியின் இந்த முடிவுக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com