பெட்ரோல் லிட்டருக்கு ரூ.25 குறைப்பு… அதிரடி அறிவிப்பு வெளியிட்ட முதல்வர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜார்கண்ட் மாநிலத்தில் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் இருசக்கர வாகனங்களுக்கு மட்டும் 25 ரூபாய் பெட்ரோல் விலையை குறைக்கப் போவதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இந்தத் தகவல் அம்மாநில மக்களை மகிழ்ச்சிக் கடலில் தத்தளிக்கச் செய்திருக்கிறது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை ரூ.100 ஐ தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் கடும் அவதியுற்று வருகின்றனர். மேலும் இந்த பெட்ரோல், டீசல் விலையேற்றம் காரணமாக அத்யாவசியப் பொருட்ளகளின் விலையும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் ஜார்கண்ட் மாநில முதல்வர் இருசக்கர வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல் விலையை அதிரடியாகக் குறைத்துள்ளார்.
மேலும் வரும் ஜனவரி 26 ஆம் தேதி முதல் விலைக்குறைக்கப்பட்ட பெட்ரோல் அம்மாநிலம் முழுவதும் விநியோகிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் இந்த அதிரடி விலைக்குறைப்பு நான்கு சக்கர வாகனங்களுக்குப் பொருந்தாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
पेट्रोल-डीजल के मूल्य में लगातार इजाफा हो रहा है, इससे गरीब और मध्यम वर्ग के लोग सबसे अधिक प्रभावित हैं। इसलिए सरकार ने राज्य स्तर से दुपहिया वाहन के लिए पेट्रोल पर प्रति लीटर ₹25 की राहत देगी, इसका लाभ 26 जनवरी 2022 से मिलना शुरू होगा:- श्री @HemantSorenJMM pic.twitter.com/MsinoGS60Y
— Office of Chief Minister, Jharkhand (@JharkhandCMO) December 29, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com