பெட்ரோல் விலை ரூ.100ஆக உயர வாய்ப்பே இல்லை! ஏன் தெரியுமா?
- IndiaGlitz, [Monday,September 17 2018]
கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை விஷம் போல் ஏறிக்கொண்டே போகிறது. ஒவ்வொரு நாளும் பெட்ரோல் டீசல் விலை ஏறிக்கொண்டே இருக்கும் நிலையில் தற்போது பெட்ரோல் விலை ரூ.85ஐ தாண்டிவிட்டது. மும்பை, டெல்லியில் ரூ.90ஐ நெருங்கிவிட்டது. இதே ரீதியில் சென்றால் பெட்ரோல் விலை மிக விரைவில் ரூ.100ஐ தொட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை அதிகபட்சமாக ரூ.99.99க்கு மேல் வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. ஏனெனில் பெட்ரோல் வழங்கும் மிஷின் ரூ.100 என்று டிஸ்ப்ளேவில் காண்பிக்காது. மூன்று டிஜிட்டில் விலை காண்பிக்கும் வகையில் அது அமைக்கப்படவில்லை. ரூ.100க்கு மேல் பெட்ரோல் விலை சென்றால் உதாரணமாக ரூ.100.33 என்று உயர்ந்தால் மிஷினில் வெறும் 0.33 என்றே காண்பிக்கும்
சமீபத்தில் உயர்தர பெட்ரோலான ஆக்டேன் பெட்ரோல் ரூ.100க்கு மேல் உயர்ந்தபோது இப்படித்தான் பெட்ரோல் விலை காண்பித்தது. இதேபோல்தான் நார்மல் பெட்ரோல் விலையும் ரூ.100 என காண்பிக்காது. எனவே அதிகபட்சமாக பெட்ரோல் விலை ரூ.99.99க்கு மேல் உயராது என கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்தவுடன் அழுவதா? சிரிப்பதா? என்றே தெரியவில்லை என பொதுமக்கள் கமெண்ட் அளித்து வருகின்றனர்.