தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை திடீரென உயர்வு: நாளை முதல் அமல் என தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை தமிழக அரசு திடீரென உயர்த்தியுள்ளது. இதனால் நாளை முதல் தமிழகத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.25 காசும், டீசல் லிட்டருக்கு ரூ.2.50 காசுகளும் உயர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் நாளை முதல் தமிழகத்தில் சில தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளதால் வாகனக்கள் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்பு கூட்டு வரியை திடீரென தமிழக அரசு உயர்த்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை பொதுமக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments