பீட்டர்பாலுக்கு நெஞ்சுவலியா? மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் பீட்டர்பாலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை வனிதாவை பீட்டர்பால் கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் இது திருமண நிச்சயதார்த்தம் மட்டுமே என்று வனிதா தரப்பில் கூறப்பட்டது.
இந்த நிலையில் பீட்டர்பாலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளதாகவும் இதனை அடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்தன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் நடிகை வனிதா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘சொல்வதற்கு நிறைய உள்ளது. ஆனால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. கடவுள் உண்மையிலேயே சக்தி மிக்கவர். நம்பிக்கையுடன் இருங்கள். ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு காரணத்திற்காக தான் நடக்கின்றது. வாழ்க்கை மிகவும் கடினமானது. அதை எதிர்கொள்ள வேண்டும். என்னை நம்புங்கள். எல்லாம் சரியாகிவிடும். கடினமானதை ஏற்றுக்கொண்டு திரும்பக் கொடுங்கள். உங்களால் முடிந்ததை இந்த உலகிற்கு காட்டுங்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.
வனிதாவின் இந்த பதிவை அடுத்து பீட்டர்பாலுக்கு நெஞ்சு வலி என்ற செய்தி உண்மையா? என்று அவர் எப்படி இருக்கிறார்? என்று நெட்டிசன்கள் கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Lots to say...nothing I can..god is great..believe..everything happens for a reason...life is tough ..face it..when u do..trust me ..everything will be ok...get tough..hit back...show the world you can..
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) August 25, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com