திருமண ஷூட்டிங் என்று சொல்லி ஏமாற்றிவிட்டார்கள்: பீட்டர்பால் மனைவி ஆவேசம்
- IndiaGlitz, [Monday,June 29 2020]
பீட்டர் பால், வனிதா திருமணம் நேற்றுமுன்தினம் மாலை நடந்த நிலையில் இந்தத் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீட்டர் பால் முதல் மனைவி வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
இந்நிலையில் பீட்டர்பல் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் என்பவர் இந்த திருமணம் குறித்து நமக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் ;இது திருமணமே அல்ல என்றும் திருமண படப்பிடிப்பு என்று சொல்லி தங்களை ஏமாற்றி விட்டார்கள் என்று கூறியுள்ளார்
வனிதாவுக்கும் பீட்டர்பாலுக்கும் திருமண படப்பிடிப்பு நடப்பதாகதான் எங்களிடம் சொன்னார்கள் என்றும், ஆனால் உண்மையான திருமணம் என்று எங்களுக்கு தெரியாது என்றும், அதன் பின்னர்தான் தெரியும் என்றும் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக பீட்டர்பால் முதல் மனைவி ஹெலன் கூறியுள்ளார்
வனிதாவை தனது மகன் தற்செயலாக பார்க்க சென்றதாகவும் அதை வைத்து தனது மகனுக்கும் இந்த திருமணத்திற்கு சம்மதம் என்றவாறு பிரச்சினையை திசை திருப்பி விட்டார்கள் என்றும் எலிசபெத் ஹெலன் குற்றம்சாட்டி உள்ளார். மேலும் வனிதாவை தனது மகன் ‘அக்கா’ என்று தான் கூப்பிடுவார் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் தனக்கு தனது கணவர் வேண்டும் என்றும், தனது குழந்தைக்கு அப்பா வேண்டும் என்றும் மற்ற குழந்தைகளை எல்லாம் அப்பாவுடன் சந்தோஷமாக சென்று கொண்டிருக்கும் போது தனது மகன் மட்டும் ஏக்கத்துடன் இருப்பதாகவும் அந்த பேட்டியில் மேலும் ஹெலன் கூறியுள்ளார்
இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தபோது இன்னும் ஓரிரு மாதங்களில் வனிதா கணவரை விரட்டிவிடுவார் அதுவரை பொறுமையாக இருங்கள் என்று கூறினார்கள் என்றும், ஆனால் தங்களால் பொறுமையாக இருக்க முடியாது என்றும் ஹெலன் தெரிவித்தார்
என்னதான் தவறு செய்தாலும் கணவர், கணவர்தான் என்றும் அதனால் அவரை என்னால் ஒதுக்க முடியாது என்றும் எனக்கு என் கணவர் வேண்டும், நான் அவருடன் வாழ வேண்டும் என்றும், வனிதா அவரிடம் இருந்து ஒதுங்கி விட வேண்டும் என்றும் வனிதா எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் தனக்கு கவலை இல்லை என்றும் நான் எனது கணவரை தவிர வேறு எதையும் நான் எதிர்பார்க்கவில்லை என்றும் எலிசபெத் ஹெலன் தனது பேட்டியில் மேலும் கூறியுள்ளார்