ரஜினிகாந்த்-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் முதல் தேசிய விருது பெற்ற கலைஞர்

  • IndiaGlitz, [Monday,June 18 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு இமயமலை பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் ஸ்டண்ட் மாஸ்டராக பீட்டர் ஹெய்ன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே இவர் ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்', 'கோச்சடையான்', 'சிவாஜி', போன்ற படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குனராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் கடந்த ஆண்டு முதன்முதலாக ஸ்டண்ட் இயக்குனருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இந்த முதல் விருதை வாங்கிய பெருமையும் பீட்டர் ஹெய்னுக்கு உண்டு. மோகன்லால் நடித்த 'புலிமுருகன்' படத்திற்காக இவர் இந்த விருதினை பெற்றார்.

ரஜினிகாந்த், விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா, மேகா ஆகாஷ், சனத், முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு இளம் இசைப்புயல் அனிருத் இசையமைக்கவுள்ளார். 'தளபதி 62' படத்தை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தையும் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

More News

பிக்பாஸ் 2: காக்ரோச் கதை சொல்லி பல்பு வாங்கிய யாஷிகா

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள பெண் போட்டியாளர்கள் அனைவரும் போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்னர் ஓவியாவின் பகுதிகளை அடிக்கடி பார்த்து மனப்பாடம் செய்து வந்திருப்பார்கள்

பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து பார்வையாளர்கள் கருத்து என்ன?

கடந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும்போது பார்வையாளர்களுக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை. ஏனெனில் பிக்பாஸ் என்பது தமிழ் ரசிகர்களுக்கு புதிய நிகழ்ச்சி.

பிக்பாஸ் 1 மற்றும் 2 போட்டியாளர்களை ஒப்பிட்ட காமெடி நடிகர்

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் 1 நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்தவர்களுக்கு இந்த பிக்பாஸ் 2 பெரிய வித்தியாசத்தை தரவில்லை என்பதே பலரது கருத்தாக உள்ளது.

ஓவியாவை பார்த்து ஷாக்கான பிக்பாஸ் 2 போட்டியாளர்கள்

பிக்பாஸ் என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது ஓவியா தான். இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ஆரவ் கூட அடுத்ததாகத்தான் ஞாபகத்திற்கு வருவார்.

பிக்பாஸ் போட்டியாளர்களின் முழு விபரங்கள்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ்  2 நிகழ்ச்சி நேற்றுமுதல் தொடங்கியுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த நிகழ்ச்சியில் நேற்று மொத்தம் 16 போட்டியாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.