ஐஐடி மெட்ராஸ் அழிந்தால் என்ன...? பீட்டர் அல்போன்ஸ் காட்டம்...!

சாதிபேதமற்ற கல்வியை முடியாத IIT மெட்ராஸ் இருந்தால் என்ன? அழிந்தால் என்ன? என, பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் காட்டமாக கூறியுள்ளார்.

நம் நாட்டில் மாபெரும் உயர் கல்வி நிறுவனங்களில் ஒன்றாக ஐ.ஐ.டி கருதப்படுகிறது. இங்கு பணிபுரிய வேண்டும் என்றும், படிக்கவேண்டும் என்பதும் பலரின் கனவாகவே இருந்து வருகிறது. இதனால் பல போராட்டங்களை கடந்தும், இங்கு கல்வி பயில மாணவர்கள் வந்து சேர்கிறார்கள். ஆனால் இங்கோ வர்க்கம், மதம் என்பதன் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு பார்ப்பதும், ஒடுக்குமுறை நடப்பதும், ஜாதி ரீதியாக இழிவு செய்யப்படுவதும் பல வருடங்களாக நடைபெற்று வருகிறது. குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும், இங்கு பணிபுரியவும், கல்வி கற்கவும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

ஆசிரியருக்கு கொடுமை :

கணிதமேதை பேராசிரியர் வசந்தா கந்தசாமி அவர்கள், உயர்ந்த சாதியினராக இல்லாததால், அங்கு பணிபுரிந்த அனைத்து வருடங்களும் அவருக்கு கொடுமை நடந்துள்ளது. இந்த அராஜகங்கள் எல்லாம் 90- களில் தான் நடந்தேறியுள்ளது. இதற்காக வசந்தா அவர்கள் கடுமையாக சட்டரீதியாக போராடி, தனக்கான நீதியைப்பெற்றார்.

மாணவி மரணம்:

சென்ற 2 வருடங்களுக்கு முன்பு கேரள மாணவி பாத்திமா லத்தீப் இறந்த செய்தி, இந்தியாவையே உலுக்கிப்போட்டது. ஜாதி, மத காரணங்களால் இங்கு மாணவர்கள் ஒடுக்கப்படுவதும், அதனால் நடக்கும் மாணவர்களின் தற்கொலை மரணங்களும் பெரும்பாலும் வெளியில் தெரிவதேயில்லை.

விபின் கடிதம்:

ஜாதி ரீதியான பாகுபாடுகளை, அதிகளவில் சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகம் வெளிப்படுத்திக்கொண்டே இருப்பதால், இங்கு பணிபுரியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் பணியில் இருந்து விலகுவதாக இ மெயில் மூலம், ஐ.ஐ.டி. நிர்வாகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் உதவிப் பேராசிரியரான விபின் . தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவம் சமூகவலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

உன்னிகிருஷ்னன் இறப்பு:

இதற்கிடையே நேற்று ஐஐடி மைதானத்தில், அங்கு பணிபுரியும் ஆசிரியர் ஒருவரின் உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது. கேரளாவைச் சேர்ந்த 30 வயதுடைய உன்னிகிருஷ்ணனின் உடல்தான் அது. இவரின் தந்தை இஸ்ரோவில் பணிபுரிந்து வருகின்றார். கடந்த ஏப்ரலில் பிடெக் முடித்த இவர், புராஜக்ட் அசோசியேட் மற்றும் பகுதி நேர பேராசிரியராக ஐஐடியில்வேலை பார்த்து வந்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் வேளச்சேரியில் உள்ள அவர் தங்கியுள்ள அறையை சென்று பார்த்த போது கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. 11 பக்கங்கள் அந்த கடிதத்தில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக எழுதப்பட்டிருந்தது. ஆனால் இது கொலையா...? தற்கொலையா...? என்ற நோக்கில் கோட்டூர்புரம் காவல்துறையினர் , சட்டப்பிரிவு 174ன்கீழ், வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

பீட்டர் அல்போன்ஸ் டுவீட் :

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவருமான
பீட்டர் அல்போன்ஸ் இதுகுறித்து டுவிட்டரில் கூறியிருப்பதாவது,

இந்தியாவின் மிக சிறந்த மாணவர்கள் பயிலும் ஐஐடி மெட்ராஸில் ஜாதி வெறி என்பது பெரும் அவமானம், கல்வி என்பது பட்டங்கள் மட்டுமல்ல. அது ஒரு விசால பார்வை. விஞ்ஞான அணுகுமுறை. அதை தர முடியாத ஐஐடி இருந்தால் என்ன? அழிந்தால் என்ன? என்று காட்டமாக பேசியுள்ளார்.

ஐஐடி-யில் நடக்கும் மரணங்கள் மர்மமாகவே இருப்பதால், சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் பலரும் இதற்கு பதிலளிக்க வேண்டும் என கடுமையான விளாசி வருகின்றனர்.

 

More News

எஞ்ஜாய் எஞ்சாமி பாடல் கலைஞர் காலமானார்: தெருக்குரல் அறிவு உருக்கமான இரங்கல்!

பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் தெருகுரல் அறிவு உள்பட பலர் பாடிய என்ஜாய் என்ஜாய் என்ற பாடல் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது என்பதும்

எனக்கு வர்ற பிரச்சனைக்கு காரணம் நான் உண்மையா இருக்குறதுதான்: சிம்புவின் 'மஹா'டீசர்

சிம்பு, ஹன்சிகா நடிப்பில் உருவான 'மஹா' படத்தின் டீஸர் சற்று முன் வெளியாகி உள்ள நிலையில் இந்த டீசரின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவி விவகாகரம்: வனிதாவுக்கு சுரேஷ் சக்கரவர்த்தி கொடுத்த பதில்!

நடிகை வனிதா சற்று முன் விஜய் டிவியில் இருந்து விலகுவதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்து இருந்தார் என்பதை பார்த்தோம். 'பிக்பாஸ் ஜோடிகள்' நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார் கலந்து கொண்டு

இது சாதாரண விஷயமல்ல, ரொம்பவே வலிக்குது: சமந்தா வருத்தம்

வலைதளங்களில் பதிவு செய்யப்படும் நெகடிவ் விமர்சனங்கள் சாதாரண விஷயம் அல்ல என்றும் அதனை பார்க்கும் போது மனம் ரொம்ப வலிக்கிறது என்றும் நடிகை சமந்தா பேட்டி ஒன்றில் கூறியிருப்பது

முதல்வரை நடிகர் அர்ஜூன் சந்தித்தது இதற்குத்தானா?

ஆக்சன் கிங் அர்ஜுன் சமீபத்தில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்தார் என்றும் இதுவொரு மரியாதை நிமித்தமாக சந்திப்பு என்றும் கூறப்பட்டிருந்தது