ராகுல் காந்திக்கு தூது அனுப்பினாரா ரஜினிகாந்த்? பீட்டர் அல்போன்ஸ் சந்தேகம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' மற்றும் 'காலா' ஆகிய இரண்டு படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித் சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார் என்பது தெரிந்ததே. இந்த சந்திப்பு குறித்து ராகுல்காந்தியே தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி ரஜினியை தங்கள் கட்சியில் வளைத்து போடவே ரஞ்சித் முலம் ரஜினிக்கு தூது அனுப்பியதாக ஒருசில அரசியல்வாதிகள் சந்தேகம் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த காங்கிரஸ் பிரமுகர் பீட்டர் அல்போன்ஸ், 'ராகுல் காந்தியை சந்திக்க வேண்டும் என்று விரும்பி அப்பாயின்மெண்ட் கேட்டது ரஞ்சித் தான். எனவே ரஜினிதான், ராகுல்காந்தி பக்கம் செல்ல ரஞ்சித்தை தூது விட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கு வருகிறது' என்று கூறினார்.
ஏற்கனவே கமல்ஹாசன் அவர்கள் ராகுல்காந்தியை சமீபத்தில் சந்தித்தார் என்பதும் அவருடைய மக்கள் நீதி மய்யம் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout