close
Choose your channels

இசைஞானி பாடலில் என்ன ஒரு ரொமான்ஸ்.. ரஜினியின் 'பேட்ட' படத்தின் 6 நிமிட வீடியோ வைரல்..!

Wednesday, January 10, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ திரைப்படம் வெளியாகி 5 வருடங்கள் ஆனதை அடுத்து படத்தில் இடம் பெறாத காட்சியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த காட்சியை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ‘பேட்ட’ திரைப்படம் வெளியானது என்பது இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெறாத ரொமான்ஸ் காட்சி ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ள நிலையில் சுமார் 6 நிமிடங்கள் கொண்ட இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

‘மூடுபனி’ திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா கம்போஸ் செய்த ’என் இனிய பொன் நிலாவே’ என்ற பாடலுக்கு ரஜினி மற்றும் சிம்ரன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளை பார்த்து ரஜினி ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

இசைஞானியின் பாடலுக்கு என்ன அழகாக ரஜினியும் சிம்ரனும் ரொமான்ஸ் செய்கிறார்கள் என்றும் குறிப்பாக இடைவெளியே வரும் ரொமான்ஸ் வசனங்கள் சூப்பராக இருக்கிறது என்றும் இப்படி ஒரு காட்சியை கார்த்திக் சுப்புராஜ் ஏன் படத்தில் வைக்காமல் விட்டுவிட்டார் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment