ரஜினி பிறந்த நாளில் 'பேட்ட' படக்குழுவினர் தரும் இன்ப அதிர்ச்சி

  • IndiaGlitz, [Thursday,December 06 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் ஒருபக்கம் ரூ.500 கோடி வசூல் செய்து பட்டையை கிளப்பி வருகிறது. இந்த நிலையில் அவர் நடித்த இன்னொரு படமான 'பேட்ட' திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் ஜெட் வேகத்தில் நடந்து வருகிறது. இந்த படம் குறித்த தகவல்கள் தினமும் வெளியாகி இணையதளங்களில் டிரெண்டில் உள்ளது.

இந்த நிலையில் நாளை 'பேட்ட' படத்தின் இரண்டாம் சிங்கிள் பாடல் வெளிவரவுள்ளது. அதனையடுத்து வரும் 9ஆம் தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடைபெறவுள்ளது. மேலும் வரும் 12ஆம் தேதி ரஜினியின் பிறந்த நாளன்று ரஜினி ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

அதாவது டிசம்பர் 12ஆம் தேதி ரஜினியின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தி ரஜினி ரசிகர்களுக்கு உச்சகட்ட உற்சாகத்தை அளித்துள்ளது.

More News

எனக்கு பன்றிக்காய்ச்சல் இல்லை: தமிழ் நடிகர் விளக்கம்

'பருத்திவீரன்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணசித்திர வேடங்களிலும் ஒருசில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்த நடிகர் சரவணன் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக

நெல் ஜெயராமன் மறைவு: கமல்ஹாசன் இரங்கல்

கடந்த 22 ஆண்டுகளில் 174 வகை பாரம்பரிய நெல் வகைகளை சேகரித்து அவற்றை மறு உற்பத்தி செய்து சாதனை புரிந்த இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் இன்று அதிகாலை காலமானார்

ஒரே வாரத்தில் '2.0' செய்த வசூல் சாதனை: லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு

கோலிவுட் திரையுலகில் இதுவரை எத்தனையோ படங்கள் வெளியாகியும் இதுவரை எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும் தாங்கள் தயாரித்த படங்களின் வசூல் தகவல்களை அதிகாரபூர்வமாக அறிவித்ததே இல்லை.

நெல் ஜெயராமன் மறைவு: சிவகார்த்திகேயன் செய்த மிகப்பெரிய உதவி

இயற்கை விவசாயியும், பாரம்பரிய நெல் விதைகளை மிட்டெடுத்தவருமான நெல் ஜெயராமன் இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிற்கே பேரிழப்பாக உள்ளது.

இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் காலமானார்

இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் உடல்நலக்குறைவால் சற்றுமுன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 50