அது எங்களோட வேலையில்லை. கமலுக்கு பீட்டா சி.இ.ஓ பதில்
- IndiaGlitz, [Wednesday,January 25 2017]
ஜல்லிகட்டு பிரச்சனை சட்ட முன்வடிவின் மூலம் முடிவுக்கு வந்துவிட்டாலும், நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் காவல்துறையின் தடியடி, முதல்வரின் நடவடிக்கை, பீட்டா தடை குறித்து பல கருத்துக்களை நடிகர் கமல்ஹாசன் தைரியமாக முன்வைத்தார்.
கமல் நேற்று கூறிய கருத்துக்களில் ஒன்று 'ஜல்லிக்கட்டுக்கு தடை கோருவதை விடுத்து, அமெரிக்காவில் நடக்கும் புல் ரைடிங் உள்ளிட்ட விளையாட்டை தடை செய்ய, பீட்டா முயற்சி செய்ய வேண்டும்' என்று கூறியிருந்தார்.
கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு பீட்டா இந்தியா அமைப்பின் சி.இ.ஓ பூர்வா ஜோஷிபுரா தற்போது பதிலளித்துள்ளார். 'பீட்டா இந்தியா என்ற அமைப்பு இந்தியாவை மையமாக கொண்ட அமைப்பு என்றும் இதன் குறிக்கோள், இந்திய விலங்குகள் வதைபடுவதை தடுப்பது மட்டுமே என்றும் கூறியுள்ளார். மேலும் கமல் கூறுவதுபோல் அமெரிக்காவில் நடக்கும் மிருகவதைகளை தடுக்க, பீட்டா யு.எஸ்., அமைப்பு உள்ளதாகவும், அந்த அமைப்பு அதுகுறித்து முடிவு எடுக்கும் என்றும் கூறிய அவர் கமல் குறிப்பிட்ட விளையாட்டு, பல மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.