காஜல் அகர்வாலிடம் உதவி கேட்ட 'பீட்டா இந்தியா'

இந்தியாவில் விலங்குகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ‘பீட்டா இந்தியா’ என்ற அமைப்பு தற்போதைய கொரோனா ஊரடங்கு நேரத்தில் தெருவில் உணவின்றி நடமாடி வரும் நாய் உள்ளிட்ட விலங்குகளுக்காக 24 மணி நேரமும் உதவி செய்து வருகின்றது. இந்த அமைப்புக்கு இந்தியாவில் இருந்து மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் நிதியுதவிகள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் ‘பீட்டா இந்தியாவின்’ சமூக வலைத்தள பக்கத்தில் பிரபல நடிகை காஜல் அகர்வாலிடம் நிதியுதவி கேட்டு டுவீட் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நேரத்திலும் 24 மணி நேரமும் தாங்கள் விலங்குகள் நலனில் அக்கறை கொள்வதாகவும், எனவே தங்களால் முடிந்த நிதியுதவியை செய்ய வேண்டும் என்றும் நடிகை காஜல் அகர்வாலிடம் பீட்டா இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஏற்கனவே பீட்டா இந்தியாவுடன் இணைந்து செயல்பட்டு வந்த நடிகை காஜல் அகர்வால், தற்போது பீட்டா இந்தியாவின் கோரிக்கையை ஏற்று அந்த அமைப்புக்கு நிதியுதவி செய்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

தினமும் 2 மணி நேரம் டாஸ்மாக் திறக்கும் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஊரடங்கு உத்தரவு காரணமாக டாஸ்மாக் மூடப்பட்டுள்ளதால் மது பிரியர்களுக்காக தினமும் 2 மணி நேரம் டாஸ்மாக் கடைகளை திறந்து வைக்க வேண்டும் என சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த

உங்களை மாதிரி ரசிகர்கள் கிடைக்க விஜய் கொடுத்து வச்சிருக்கணும்: பிரபல இயக்குனர் பாராட்டு

தமிழகத்துக்கு எப்போதும் இயற்கைப் பேரிடர் வந்தாலும் முதல் நபராக சமூக சேவை செய்து பொதுமக்களுக்கு உதவி செய்வது விஜய் ரசிகர் தான் என்பது அனைவரும் அறிந்ததே

கறிவிருந்து வைத்து கொரோனா திருவிழாவை கொண்டாடிய இளைஞர்: அள்ளிச்சென்ற போலீஸ்

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் கொத்துக் கொத்தாக உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கும் நிலையில் கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் கொரோனாவை திருவிழாவாக கொண்டாடி இருப்பது

வாயில்லா ஜீவன்களுக்கு உணவிடும் வரலட்சுமி: நெகிழ்ச்சியான வீடியோ

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஏழை எளிய மக்கள் சாப்பாட்டிற்கு திண்டாடி வருகின்றனர்.

ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்கள் கொடுத்திருக்காங்க: ரேணிகுண்டா நடிகரின் வீடியோ

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெரும் சிக்கலில் உள்ளனர்.