கொரோனா தனிமையில் இருந்து தப்பி காதலி வீட்டுக்குச் சென்ற இளைஞர்!!! 6 மாதம் சிறை!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆஸ்திரேலியாவில் கொரோனா அறிகுறியால் ஹோட்டல் அறையில் தனிமைப் படுத்தப்பட்ட இளைஞர் ஒருவர் அடிக்கடி அங்கிருந்துத் தப்பி வெளியே சுற்றியிருக்கிறார். இதனால் கடுப்பான அந்நகர போலீஸார் அவரை பல இடங்களில் தேடி கடைசியில் காதலி வீட்டில் வைத்து கைது செய்திருக்கின்றனர். அதோடு அந்த இளைஞரை நீதிமன்றத்திலும் ஆஜர் படுத்தி இருக்கின்றனர்.
கொரோனா பரவல் தடுப்புக்காக அறிகுறி உள்ளவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தும் நடைமுறை உலக நாடுகள் அனைத்திலும் இருக்கிறது. மேலும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களையும் 14 நாட்கள் தனிமைப்படுத்துவது வழக்கம். இந்நிலையில் கொரோனா அறிகுறியோடு வெளிநாட்டில் இருந்து வந்த யூசுஃப் என்ற இளைஞரை அந்நாட்டின் சுகாதாரத்துறை ஹோட்டல் அறையில் வைத்து தனிமைப்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் யூசுஃப் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் ஹோட்டல் ஜன்னல் வழியாக ஒரு ஏணியை தயார் செய்து அதன் மூலம் வெளியே அடிக்கடி சென்று வந்திருக்கிறார். இதனால் ஹோட்டல் நிர்வாகத்தினர் போலீஸை துணைக்கு அழைத்திருக்கின்றனர். அதையடுத்து பயந்துபோன இளைஞர் காதலி வீட்டுக்குச் சென்று தஞ்சம் அடைந்திருக்கிறார். கடைசியில் போலீஸார் அப்பெண்ணின் வீட்டில் உள்ள பெரிய கபோர்ட்டில் ஒளிந்து இருந்த இளைஞரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
நீதிமன்ற விசாரணையில் யூசுஃப் தன்னுடைய காதலிக்கு பிறந்தநாள். அதனால்தான் நான் அங்கு சென்றேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் இந்தக் காரணத்தை ஒப்புக்கொள்ளாத நீதிபதிகள் கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை மீறி நடந்து கொண்டது குற்றம் என்று சுட்டிக்காட்டியதோடு யூசுஃபுக்கு 6 மாதம் சிறை தண்டனையையும் விதித்து உத்தரவிட்டு இருக்கின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments