ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு 4 மாதங்களுக்கு மட்டும் அனுமதி அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த அறிவிப்பில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் அனுமதி. தேவைப்பட்டால் மீண்டும் கூட்டம் நடத்தி முடிவு செய்து கொள்ளலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
இந்த விவகாரம் குறித்து திமுக எம்.பி கனிமொழி ஆக்சிஜன் தயாரிக்கும் பகுதிகளுக்கு மட்டும் மின்சாரம் வழங்க வேண்டும் பிற பகுதிகளுக்கு எக்காரணம் கொண்டும் மின்சாரம் வழங்கக் கூடாது எனத் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். இந்தியா முழுவதும் நிலவிவரும் ஆக்சிஜன் பற்றாக்குறையைத் தீர்க்கும் பொருட்டு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளிக்கும்படி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தது.
இந்த மனு மீதான விசாரணை தற்போது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் ஆக்சிஜன் உற்பத்திக்காக வேண்டி 4 மாதங்களுக்கு மட்டும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. முன்னதாக ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக அரசே ஆக்சிஜன் உற்பத்தியை மேற்கொள்ளலாம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தபோது அதற்கு வேதாந்த நிறுவனம் எதிர்ப்பு காட்டியதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments