திரையரங்குகளில் பார்வையாளர்களின் எண்ணிக்கை: மத்திய அரசு புதிய அறிவிப்பு
- IndiaGlitz, [Wednesday,January 27 2021]
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 10 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் திரையரங்குகளை திறக்க மத்திய மாநில அரசுகள் அனுமதி அளித்திருந்தது ஆனால் அதே நேரத்தில் திரையரங்குகளில் 50 சதவீதம் பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
சமீபத்தில் வெளியான ’மாஸ்டர்’ திரைப்படத்திற்கு கூட 50% பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் கொரோனா ஊரடங்கு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது
இதில் பிப்ரவரி 28ஆம் தேதி வரை கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் ஊரடங்கை நீடித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் திரையரங்குகளில் 50 சதவீதத்துக்கும் மேலான இருக்கைகளுக்கு மத்திய உள்துறை அனுமதி அளித்துள்ளது. திரையரங்குகளில் கூடுதல் பார்வையாளர்களை அனுமதிக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து திரையரங்குகளில் அதிக பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது உறுதியாகி உள்ளது