சுயமரியாதை, பகுத்தறிவை ஒருங்கே ஊட்டியவர்… தந்தை பெரியார் குறித்து முதல்வர் டிவிட்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் மிகப்பெரும் கருத்துப் புரட்சியாளராகக் கருதப்பட்ட தந்தை பெரியாரின் 47 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப் படுகிறது. இத்தினத்தில் பல தலைவர்களும் தந்தை பெரியாரின் கொள்கைகளையும் கருத்துகளையும் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தந்தை பெரியார் குறித்து அவர் சுயமரியாதையையும் பகுத்தறிவையும் மக்களுக்கு ஒருங்கே ஊட்டியவர் என்று டிவிட் செய்து இருக்கிறார்.
முதல்வர் பதிவிட்ட டிவிட்டரில், “சாதிய பாகுபாடுகளை அடியோடு தகர்த்தெறிந்தவர். சுயமரியாதையையும் பகுத்தறிவையும் மக்களுக்கு ஒருங்கே ஊட்டியவர். தான் கொண்ட கொள்கைகளை தீர்க்கமாக கடைப்பிடித்தவர். பொது வாழ்விற்கு இலக்கணமாய் வாழ்ந்த பகுத்தறிவு பகலவனை அவர்தம் நினைவுநாளில் நினைவு கூர்கிறேன்“ எனத் தெரிவித்து இருக்கிறார்.
சாதிய பாகுபாடுகளை அடியோடு தகர்த்தெறிந்தவர். சுயமரியாதையையும், பகுத்தறிவையும் மக்களுக்கு ஒருங்கே ஊட்டியவர். தான் கொண்ட கொள்கைகளை தீர்க்கமாக கடைபிடித்தவர். பொதுவாழ்விற்கு இலக்கணமாய் வாழ்ந்த பகுத்தறிவு பகலவனை அவர்தம் நினைவுநாளில் நினைவு கூர்கிறேன். pic.twitter.com/P26o4Jo5sh
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) December 24, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments