குண்டர் சட்டத்தை அடுத்து பல்கலையில் இருந்தும் நீக்கப்பட்ட வளர்மதி
- IndiaGlitz, [Monday,July 24 2017]
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவி வளர்மதி சமீபத்தில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறை முதலாம் ஆண்டு மாணவியான வளர்மதி, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மாணவர்களிடமும் பொதுமக்களிடமும் துண்டு பிரசரம் விநியோகித்ததால் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
குண்டர்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வளர்மதியை தற்போது சேலம் பெரியார் பல்கலைக்கழகம் இடைநீக்கம் செய்துள்ளது.
இதுகுறித்து பெரியார் பல்கலைக்கழக நிர்வாகிகள் கூறியப்போது, "மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தில் இருந்து நீதிமன்றம் விடுவித்தால் அவர் மீது பிறப்பிக்கப்பட்ட இடை நீக்க உத்தரவு ரத்து செய்யப்படும்” என்று கூறினர்.