ரஜினி இனிமே உயிரோடவே இருக்க முடியாது: பெரியாரிஸ்டுகள் ஆவேசம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் துக்ளக் ஆண்டு விழாவில் பேசியபோது பெரியார் குறித்து கூறிய ஒரு சில கருத்துக்கள் பெரும் சர்ச்சையாகி உள்ளது. பெரியார் குறித்து அவதூறாக ரஜினிகாந்த் பேசி விட்டதாக கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் குற்றம்சாட்டி வருவதோடு அவர் தனது கருத்தை வாபஸ் பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்
அதுமட்டுமன்றி ரஜினிகாந்த் வீடு முன்பாக பெரியார் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று ரஜினிகாந்த் வீட்டின் முன் போராட்டம் நடத்திய பெரியாரின் ஆதரவாளர்கள் சிலர் ஆவேசமாக பேட்டி அளித்தபோது தமிழ்நாட்டில் இனிமேல் ரஜினிகாந்த் உயிருடன் இருக்க முடியாது என்றும் அவ்வாறு இருக்க விடமாட்டோம் என்றும் கூறினார்கள்
மேலும் மேலும் தமிழகத்தில் இனிமேல் ரஜினி படம் ஓடாது என்றும் ஓட விடமாட்டோம் என்றும் ஆவேசமாக கூறிய அவர்கள் ரஜினியை தமிழ்நாட்டில் இனிமேல் நடமாடவே விடமாட்டோம் என்றும் ஆவேசமாக தெரிவித்துள்ளார்கள் இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. இந்த நிலையில் ஒரு கருத்துக்கு எதிர்க்கருத்து தெரிவிக்காமல் வன்முறையை தூண்டும் வகையில் பேசுவதுதான் பெரியாரின் கொள்கையா? என ரஜினி ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழ்நாட்டுலே ரஜினி இனிமே உயிரோடவே இருக்க முடியாது - விடவே மாட்டோம்
— மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் ?? (@mayavarathaan) January 23, 2020
- இதுதான் திமுக அயோக்கிய கூட்டணி கும்பலின் மிரட்டல்.
அவ்வளவு பெரிய்ய அப்பாட்டக்கருங்களாடா நீங்க?! pic.twitter.com/MVRdaj0kHd
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments