பெரியபாண்டியை சுட்டது முனிசேகர்தான்: தமிழக காவல்துறை விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையில் உள்ள நகைக்கடையில் கொள்ளையடித்த கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற காவல்துறையின் தனிப்படையில் இருந்த ஆய்வாளர் பெரியபாண்டியனை கொள்ளையர்கள் சுட்டுக்கொன்றதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ராஜஸ்தான் போலீசார், பெரியபாண்டியனை சுட்டது கொள்ளையர்கள் இல்லை என்றும் பெரியபாண்டியனின் சக ஆய்வாளர் முனிசேகர் தான் என்றும் கூறியது
இந்த நிலையில் ஆய்வாளர் பெரியபாண்டியனை சுட்டது முனிசேகர் தான் என்றும், கொள்ளை கும்பலிடம் இருந்து பெரியபாண்டியை காப்பாற்ற முயன்றபோது தவறுதலாக முனிசேகர் சுட்டதாகவும் தமிழக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
மேலும் முனிசேகர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து முழுமையான விசாரணைக்கு பின்னரே முடிவு செய்யப்படும் என்றும் தமிழக காவல்துறை கூறியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com