கவனமாக இருங்கள்... நாட்டில் 70% பேருக்கு கொரோனா ஏற்பட வாய்ப்பு..! ஏஞ்சலா மெர்கல்.
- IndiaGlitz, [Friday,March 13 2020]
சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரசானது இன்று உலகம் முழுவதும் 123 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தொற்றை உலகம் முழுக்க பரவியுள்ள ஒரு பெருந்தொற்று நோய் (பாண்டெமிக்) என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
1,34,829 பேர் உலகமுழுக்க பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஐரோப்ப கண்டத்தில் மட்டும் 17,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு அந்நாட்டு அதிபர் டிரம்ப் தடை வித்தித்துள்ளார். அமெரிக்காவிலும் 1135 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 38 பேர் பலியாகியுள்ளனர்.
ஜெர்மன் நாட்டில் கிட்டத்தட்ட 70 சதவீத பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார். 8.2 கோடி பேர் இருக்கும் ஜெர்மனியில் 5.8 கோடி பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட வாய்ப்பு இருப்பதால் கவனமாக இருக்குமாறு கூறியுள்ளார். இதுவரையில் ஜெர்மனியில் 2 பேர் மட்டும் இறந்துள்ளனர்.
அந்நாட்டு அரசானது எல்லா கலை நிகழ்ச்சிகள், திரையரங்குகள்,பள்ளிகள் கல்லூரிகள் போன்றவற்றை கால வரையறையின்றி மூடியுள்ளது.