15 வருடங்கள் கழித்தும் பாராட்டை பெற்ற விஜய் படம்: இயக்குனர் பேரரசு நெகிழ்ச்சி

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகில் உள்ள அனைத்து தொழில்களும் முடங்கிவிட்டாலும், முன்பை விட அதிக லாபம் தரும் ஒரே தொழிலாக ஊடகங்கள் உள்ளன. குறிப்பாக தொலைக்காட்சி ஊடகங்கள் பொதுமக்கள் அனைவரும் வீட்டில் இருப்பதை கணக்கில் கொண்டு சூப்பர் ஹிட்டான அஜித், விஜய் படங்களை மாறி மாறி ஒளிபரப்பி வருகின்றன.

அந்த வகையில் நேற்று ஒரு தனியார் தொலைக்காட்சியில் விஜய் நடித்த ‘திருப்பாச்சி’ திரைப்படம் ஒளிபரப்பானது. கொரோனா செய்திகளின் பரபரப்புக்கு இடையே ‘திருப்பாச்சி’குறித்த டுவிட்டுகளும் டிரண்டுக்கு வந்தன. கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர்ஹிட் படமான இந்த படத்தை 15 வருடங்களுக்கு பின்னரும் பலரும் முதல்முறை பார்ப்பது போல் ரசித்து பார்த்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்து ‘திருப்பாச்சி’ பட இயக்குனர் பேரரசு தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: நேற்று சன் டிவியில் ’திருப்பாச்சி’ திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது! நேற்றுதான் படம் ரிலீஸ் ஆனதுபோல் நிறைய பேர் இன்று தொலைபேசியில் பாராட்டினார்கள். பாராட்டிய அனைவருக்கும் நன்றி’ என்று தெரிவித்துள்ளார். இயக்குனர் பேரரசுவின் இந்த டுவிட்டுக்கு பலர் பாராட்டி கமெண்ட் அளித்து வருகின்றனர்.

More News

கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பிய பிரபல பாடகி

பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூர் சமீபத்தில் லண்டனில் இருந்து திரும்பி வந்த போது விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனையில் இருந்து தப்பி, வீட்டிற்கு சென்றதாகவும்

விலங்குகளுக்கு கொரோனா வைரஸ்!!! இதுவரை சொல்லப்பட்ட ஆய்வு முடிவுகள்???

அமெரிக்காவின் நியூயார்கள் நகரில் உள்ள பிராங்க்ஸ் மிருகக்காட்சி சாலையில் ஒரு புலிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

'திருட்டுப்பயலே' இயக்குனரின் மெகா பட்ஜெட் படம் குறித்த தகவல்!

'திருட்டுப் பயலே' மற்றும் 'திருட்டுப் பயலே 2' உள்பட ஒரு சில வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் சுசி கணேசன் தற்போது 'திருட்டுப்பயலே 2' படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து வருகிறார்

கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் அனுமதிப்பட்ட பிரிட்டன் பிரதமர்!!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்னரே கொரோனா பாதிப்பு இருப்பது

பெப்சி தொழிலாளர்களுக்காக 'பிகில்' தயாரிப்பாளர் கொடுத்த மிகப்பெரிய தொகை

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான சினிமா தொழிலாளர்கள் வறுமையில் வாடுகின்றனர்.