ரியோட்டா மீடியா தயாரிக்கும் 'பேரன்பும் பெருங்கோபமும்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

  • IndiaGlitz, [Tuesday,February 20 2024]

'இசை ஞானி' இளையராஜா இசையமைப்பில் உருவாகி இருக்கும் 'பேரன்பும் பெருங்கோபமும்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

பாலுமகேந்திராவின் 'சினிமா பட்டறை' மாணவர் அறிமுக இயக்குநர் சிவபிரகாஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'பேரன்பும் பெருங்கோபமும்'. இதில் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை ஷாலி நிவேகாஸ் அறிமுகமாகிறார்.

இவர்களுடன் மைம் கோபி, அருள் தாஸ், லோகு, சுபத்ரா, தீபா, சாய் வினோத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜே. பி. தினேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசை ஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ராமர் மேற்கொள்ள, கலை இயக்கத்தை சரவணன் கவனித்திருக்கிறார். நல்ல சிந்தனை கொண்ட சாமானியனை பற்றிய இந்த திரைப்படத்தை ரியோட்டா மீடியா படத் தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருக்கிறது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' கதை நாயகனின் வாழ்வில் மூன்று வெவ்வேறு கால கட்டங்களில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பாக இப்படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது. சமூகத்தால் இழைக்கப்பட்ட தீமைகளை நாயகன் எப்படி எதிர்கொண்டான்? என்பதை விறுவிறுப்பான காட்சிகளுடன்,, சுவாரசியமான திருப்பங்களுடன் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.'' என்றார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் நாயகனும், நாயகியும் இந்த மண்ணின் அசலான காதலர்களை பிரதிபலிப்பதால்... ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு இளைய தலைமுறையினரிடத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

More News

அரண்மனையை அடுத்து 3ஆம் பாகமாகும் இன்னொரு சுந்தர் சி படம்.. கவின் ஹீரோவா?

சுந்தர் சி இயக்கத்தில் உருவான 'அரண்மனை' திரைப்படம் மூன்று பாகங்கள் ரிலீஸ் ஆகிய நிலையில் நான்காம் பாகம் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது என்பதும் தெரிந்தது.

நிதி ஒதுக்கி, குழுக்கள் அமைத்தாலும் மேகதாதுவில் எந்த காலத்திலும் அணைக்கட்ட முடியாது: துரைமுருகன் திட்டவட்டம்

மேகதாதுவில் எந்த காலத்திலும் கர்நாடகா அணைக்கட்ட முடியாது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மும்பையில் திறக்கப்பட்ட தமிழ் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகம்.. சிவகுமார், சூர்யா பங்கேற்பு..!

பிரபல தமிழ் திரைப்பட நிறுவனத்தின் கிளை மும்பையில் திறக்கப்பட்ட நிலையில் இந்த திறப்பு விழாவில் நடிகர் சிவகுமார் மற்றும் நடிகர் சூர்யா கலந்து கொண்ட கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி

தனுஷின் 'D50' படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.. வேற லெவல் டைட்டில்..!

நடிகர் தனுஷின் 50வது திரைப்படத்தில் அவர் முக்கிய கேரக்டரில் நடித்து அவரே இயக்கி வந்தார் என்பதையும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதையும் பார்த்தோம்.

சூர்யாவின் 'கர்ணா' படத்தின் நாயகி இவர்தான்: உறுதி செய்த 'வலிமை' தயாரிப்பாளர்..!

நடிகர் சூர்யா நடிக்க இருக்கும் 'கர்ணா' படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் ஜான்வி கபூர் நடிக்கவிருப்பது  தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.