கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது பெரம்பலூர்!!!

  • IndiaGlitz, [Friday,April 17 2020]

 

தமிழத்தில் நேற்றைய நிலவரப்படி 1,267 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதை சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியது. அதில் அதிகபட்சமாக சென்னையில் 217 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அடுத்ததாக கோவையில் 127 பேருக்கும், திருப்பூரில் 80 பேருக்கும் கொரோனா நோய்த்தொற்று இருப்பது தெரியப்படுத்தப்பட்டது. மிகவும் குறைவாக எண்ணிக்கையில் பெரம்பலுரில் 1 இளைஞர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் 28 வயது இளைஞர் கொரோனா நோய்ப்பாதிப்பால் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். கடந்த 2 வாரங்களாக கொடுக்கப்பட்ட சிகிச்சையில் தற்போது அவருக்கு கொரோனா நோய்த்தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், அவருடன் தொடர்புடைய யாருக்கும் இதுவரை கொரோனா நோய்த்தொற்று ஏற்படவில்லை. இந்நிலையில் இளைஞர் திருச்சியிலிருந்து உடல் நலம்பெற்று பெரம்பலூர் திரும்பியிருக்கிறார். தற்போது பெரம்பலூரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இல்லாததால் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக பெரம்பலூர் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், பெரம்பலூர் மாவட்டம் கவுல்பாளையம் பகுதியல் குடிசைமாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள 200 வீடுகளை கொரோனா சிகிச்சைக்கு அளிப்பதற்கு ஏற்றவாறு மாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் தலா 2 படுக்கைகள் என்ற எண்ணிக்கையில் இதுவரை 400 படுக்கைகள் போடப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெரம்பலூரைத் தவிர மிகக் குறைந்த எண்ணிக்கையில் அரியலூரில் 2 பேரும், கள்ளக்குறிச்சியில் 3 பேரும், காஞ்சிபுரத்தில் 8 பேரும், தென்காசி மற்றும் நீலகிரியில் தலா 9 பேரும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஜெனிபர் லோபஸ் பாடலுக்கு நடனம் ஆடிய தமிழ் நடிகை

ஊரடங்கு உத்தரவு காரணமாக படப்பிடிப்பு இல்லாமல் இருப்பதால் பிரபல நடிகர், நடிகைகள் முதல் திரைத்துறையினர் அனைவரும் தங்களது சமூக வளைதளத்தில் வித்தியாசமான வீடியோக்களை வெளியிட்டு

இந்த 3 நோய் பாதிப்பு உள்ளவர்களை கொரோனா மேலும் பாடாய் படுத்துகிறது ஏன்??? மருத்துவக் காரணம்!!!

கொரோனா நோயாளிகளை வைரஸ் கிருமிகளிடம் இருந்து மீட்பதற்கு மருத்துவ உலகம் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.

தளபதி விஜய் மகனின் நலம் குறித்து விசாரித்த தல அஜித்

தளபதி விஜய் மற்றும் தல அஜித் ஆகிய இருவரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தினந்தோறும் மோதிக் கொண்டாலும், விஜய் மற்றும் அஜீத் ஆகிய இருவரும் இன்றுவரை நட்புடன் உள்ளனர்

கொரோனா அச்சம் எதிரொலி: சாலையில் இருந்த பணத்தை கண்டுகொள்ளாத பொதுமக்கள்

சாலையில் 10 ரூபாய் இருந்தாலே ஓடோடிச் சென்று எடுக்கும் பொதுமக்கள் தற்போது ஆயிரக்கணக்கில் சாலையில் பணம் இருந்தும் அதனை யாரும் கண்டுகொள்ளாமல் இருந்த அதிசய சம்பவம்

ரசிகரின் வேண்டுகோளை ஏற்று டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை

கொரொனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.