பெப்சி நிறுவன ஊழியர்களுக்கு கொரோனாவா? அதிர்ச்சித் தகவல்
- IndiaGlitz, [Wednesday,June 24 2020]
உலகம் முழுவதும் குளிர்பானங்கள் விற்பனையில் முன்னணியில் உள்ள நிறுவனம் பெப்சி. இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு சில ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக கூறப்படுவதால் அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சீனாவில் உள்ள பீஜிங் பெப்ஸி நிறுவனத்தில் சமீபத்தில் உணவு பதப்படுத்தும் பணியில் உள்ள ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே சீனாவில் கொரோனா வைரஸ் முதல் அலை முடிந்து இரண்டாவது அலை வீசுவதாக கூறப்படும் நிலையில் சீனாவில் உள்ள பெப்ஸி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால் பெப்சி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆனால் தங்கள் நிறுவனத்தின் குளிர்பானங்கள் மற்றும் சிற்றுண்டி பொருட்கள் பாதுகாப்பானவை என்று சீனாவில் உள்ள பெப்ஸியின் கிளை நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும் பெப்ஸி நிறுவனத்தில் புரியும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக வந்துள்ள தகவல்கள் நுகர்வோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெப்சி நிறுவனம் பீஜிங்கில் உள்ள நிறுவனத்தின் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சீன அரசு நோய்த் தொற்று பரவல் அதிகரிப்பதால் உணவு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை குறிவைத்து அதிக அளவிலான பரிசோதனைகளை செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.