அருண்ஜேட்லியுடன் பெப்சி நிறுவனத்தின் சிஇஓ அவசர ஆலோசனை

  • IndiaGlitz, [Thursday,March 02 2017]

சென்னை மெரீனா உள்பட தமிழகத்தின் பல இடங்களில் சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டு எழுச்சி போராட்டத்தில் பெப்சி, கோக் உள்பட பல வெளிநாட்டு பானங்களை குடிப்பதை நிறுத்த வேண்டும் என்று இளைஞர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து துறையினர்களிடம் இந்த தாக்கம் எதிரொலித்தது. இதனால் நேற்று முதல் தமிழகத்திலும் புதுச்சேரியிலும் பெப்சி கோக் உள்பட வெளிநாட்டு பானங்களின் விற்பனை அதிரடியாக நிறுத்தப்பட்டது.
ஒரு மாநிலமே ஒட்டுமொத்தமாக இந்த குளிர்பானங்களை அவர்களாகவே முன்வந்து அருந்துவதை நிறுத்திவிட்டதால் குளிர்பான நிறுவனங்கள் பெரும் நஷ்டமடைந்தன. இந்நிலையில் இதுகுறித்து ஆலோசனை செய்ய மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி அவர்களை சற்று முன்னர் பெப்சி நிறுவனத்தின் சிஇஓ இந்திராநூயி சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த சந்திப்பில் அவர்கள் என்ன ஆலோசனை செய்தாலும் கவலையில்லை, ஒட்டுமொத்த தமிழர்களும் விவசாயிகளின் தண்ணீரை உறிஞ்சி தயாரிக்கப்படும், உடல் நலத்திற்கு தீங்கான இந்த பானங்களுக்கு இனி ஆதரவு தரமாட்டார்கள் என்பது உறுதி.