இன்று முதல் வெளிநாட்டு பானங்களுக்கு மூடுவிழா. இளைஞர்களின் 2வது வெற்றி

  • IndiaGlitz, [Wednesday,March 01 2017]

கடந்த மாதம் சென்னை மெரீனா உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் உலகின் கவனத்தை திருப்பியது மட்டுமின்றி தமிழக மக்களிடையே பல்வேறு விழிப்புணர்ச்சிகளை ஏற்படுத்தியது. அவற்றில் ஒன்று கலர்ப்பொடி கலந்த பூச்சிமருந்து என்று கூறப்படும் வெளிநாட்டு பானங்களை தவிர்ப்பது. ஐ.டி.ஊழியர்கள் உள்பட அனைத்து துறைகளை சேர்ந்தவர்களும் கலந்து கொண்ட இந்த போராட்டத்தின் பயனாக ஜல்லிக்கட்டுக்கு தனிச்சட்டம் இயற்றப்பட்டபோதிலும், அதைவிட தமிழக மக்களுக்கு கிடைத்த பெரும் வெற்றியாக வெளிநாட்டு பானங்கள் குறித்த தீமைகள் மக்களிடம் பரவியது
கடந்த பல ஆண்டுகளாக சமூக நல ஆர்வலர்கள் ஏற்படுத்திய விழிப்புணர்ச்சியைவிட ஒரே வாரத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பொதுமக்கள் வெளிநாட்டு பானங்களின் தீமையை புரிந்து கொண்டு விழிப்புணர்வு பெற்றனர்.
மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த வணிக நிறுவனங்கள் மற்றும் வணிகர்கள் பேரவை மார்ச் 1 முதல் வெளிநாட்டு பானங்களை விற்பனை செய்வது இல்லை என்று அதிரடியாக முடிவெடுத்தன. அந்த மார்ச் 1 இன்றுதான்.
சென்னை உள்பட அனைத்து நகரங்களில் உள்ள பெரும்பாலான வணிக வளாகங்களில் இன்று முதல் வெளிநாட்டு பானங்கள் விற்பனை இல்லை என்று போர்டு வைத்துள்ளதே இளைஞர்கள் போராட்டத்தின் இன்னொரு வெற்றியாக கருதப்படுகிறது.
ஏற்கனவே கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெளிநாட்டு பானங்களின் விற்பனை 80% அளவுக்கு குறைந்ததாக தகவல்கள் வெளிவந்த நிலையில் இன்று முதல் அது 100% குறைவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. வெளிநாட்டு பானங்களில் காலி பாட்டில்கள் மட்டுமே முன்பெல்லாம் குப்பையில் இருக்கும் என்ற காலம் மாறி இன்று பல குப்பை தொட்டிகளில் காலாவதியான குளிர்பான பாட்டில்கள் கொட்டி கிடப்பதே நமக்கு கிடைத்த வெற்றிக்கு சான்றாக கருதப்படுகிறது.
வெளிநாடு பானங்களுக்கு பதிலாக இளநீர், மோர் போன்ற நமது பாரம்பரிய பானங்களை குடிப்பதால் நம்மூர் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருகுவதோடு, நமது உடலுக்கும் நன்மை பயக்கும். இளைஞர்களின் இரண்டாவது வெற்றியாக கருதப்படும் இந்த மாற்றம் தொடர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

More News

வழக்கிலிருந்து தப்பித்தார் சசிகலா

அதிமுக எம்பி சசிகலா புஷ்பா மீது நிர்வாண மசாஜ் புகார் கொடுத்த அவரது வீட்டு பணிப்பெண்கள் தங்களது புகாரை திடீரென வாபஸ் பெற்றுள்ளனர். ஒருசிலரின் நெருக்கடியினால்தான் தாங்கள் புகார் கொடுத்ததாக அந்த பணிப்பெண்கள் கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...

பிரபல அரசியல் தலைவருக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 65வது பிறந்த நாளை குடும்பத்தினர் மற்றும் திமுக தொண்டர்களுடன் கொண்டாடி வருகிறார். அவருக்கு திமுக தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் அன்பழகன் மற்றும் பிற அரசியல் கட்சி தலைவர்கள், திமுக தொண்டர்கள்ள் வாழ்த்து கூறி வருகின்றனர்...

திமுக செயல்தலைவர் மு.கஸ்டாலின் பிறந்த நாள். கருணாநிதி, அன்பழகனிடம் வாழ்த்து பெற்றார்.

திமுக செயல்தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று 65வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திமுக தொண்டர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்...

ரிலையன்ஸ் ஜியோ-சாம்சங் கூட்டணியில் இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம்

இந்தியாவில் செல்போன் உபயோகித்து வரும் பெரும்பாலானோர் கடந்த சில மாதங்களுக்கு முன் வரை 2ஜி தொழில்நுட்பத்தையே பயன்படுத்தி வந்தனர். ஒருசிலர் மட்டுமே 3ஜி தொழில்நுட்பத்தை உபயோகித்து வந்தனர்...

விஜய் 61 படம் இளையதளபதியின் மூன்று முகமா?

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'விஜய் 61' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றது என்பதும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கவுள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்...