பெப்சி-கோக் எதிர்ப்பு எதிரொலி. ஓட்ஸ் பக்கம் பார்வையை திருப்பும் வெளிநாட்டு நிறுவனங்கள்

  • IndiaGlitz, [Friday,March 03 2017]

பெப்சி, கோக் போன்ற வெளிநாட்டு பானங்கள் குடிப்பதால் உடல்நலத்திற்கு தீங்கானது என்பதை கிட்டத்தட்ட இந்தியர்கள் பலர் புரிந்து கொண்டதால் அதன் விற்பனை பெருமளவு சரிந்துள்ளது. குறிப்பாக ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்னர் தமிழகத்தில் சுத்தமாக பெப்சி, கோக் விற்பனை இல்லை என்றாகிவிட்டது.

இந்நிலையில் பெப்சி, கோக்கை அடுத்து ஓட்ஸ் பக்கம் தன் பார்வையை வெளிநாட்டு நிறுவனங்கள் திருப்பியுள்ளது. சமீபத்தில் பிரதமர் மோடியை சந்தித்த பெப்சி சி.இ.ஓ இந்திராநூயி, இந்தியாவில் விளையும் பழங்களின் சாறு கலந்த கலர் பானங்கள் தயாரித்து விற்பனை செய்யவுள்ளதாகவும், அதேபோல் குவாட்ஸ் என்னும் ஓட்ஸை சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளதாகவும், இதுகுறித்து பிரதமரிடம் விளக்கவே இந்த சந்திப்பு நடந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் பாரம்பரிய சிறுதானியங்களான கம்பு,கேப்பை, வரகு, சாமை, ஆகியவை உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தருவதோடு நீரழிவு நோயும் இந்த உணவுகளால் தடுக்கப்படுகிறது. ஆனால் எந்தவித நன்மையும் கொடுக்காத, அதே நேரத்தில் நீரிழிவு நோயிற்கு சிறந்த உணவு என பொய்யான விளம்பரத்துடன் ஓட்ஸ் போன்ற உணவுகளை இந்தியாவில் வர்த்தகம் செய்து இந்தியாவின் கோடிக்கணக்கான பணத்தை கொள்ளையடிக்க வெளிநாட்டு நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன.

பொதுமக்களுக்கு ஆரம்பத்திலேயே இதுகுறித்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி ஓட்ஸ் உணவுப்பொருட்களை இந்தியாவில் நுழையவிடக்கூடாது என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது.