மக்கள் கொடுங்கோலுக்கு எதிராக என்றுமே துணை நிற்பார்கள். கமல்ஹாசன்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று ஜெயலலிதாவின் நினைவிடத்தில் கிளப்பிய அரசியல் புயல் தமிழக அரசியலை சுழன்று அடித்து வருகிறது. இந்த புயலில் வீழ்பவர் யார்? எழுபவர் யார்? என்ற கேள்விக்கு இன்று விடை தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு பெரும்பாலான அதிமுக தொண்டர்களின் ஆதரவு இருப்பதாகவும், சசிகலாவுக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆதரவு மட்டுமே இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே அரசியல் உள்பட சமூக கருத்துக்களை தனது சமூக வலைத்தளத்தில் அதிரடியாக வெளிப்படுத்தி வரும் உலக நாயகன் கமல்ஹாசன், நேற்றைய முதல்வரின் அதிரடி குறித்து கூறியபோது, 'சில வருடங்களுக்கு முன் இதே பிப்ரவரி 7மஆம் தேதி தான் விஸ்வரூபம் படம் பல சிக்கல்களுடன் வெளியானது. அந்த நாட்களை நினைவு கூறும் தருணத்தில், மக்கள் கொடுங்கோலுக்கு எதிராக என்றுமே துணையாக நின்று ஆதரவு தெரிவிப்பார்கள்' என்று கூறியுள்ளார்.
மேலும் இன்னொரு டுவீட்டில், ' “தமிழக மக்களே உறங்கச் செல்லுங்கள். நாளை உங்களுக்கு முன்பாக அவர்கள் எழுந்து விடுவார்கள்.” என பதிவு செய்துள்ளார். கமல்ஹாசனின் இந்த கருத்தின் உள்ளர்த்ததை பலர் புரிந்து கொண்டதாகவும், ஒருசிலர் புரியவில்லை என்றும் கமெண்ட்டுக்களை பதிவு செய்துள்ளனர்.
Go to sleep TN. They will wake up before us. Good night.
— Kamal Haasan (@ikamalhaasan) February 7, 2017
7 th of februarya few years back made me understand how people's love can make an artiste win against tyranny. Was humbled & stay that way
— Kamal Haasan (@ikamalhaasan) February 7, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments