எந்த வகை ரத்தம் உள்ளவர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகம்..?! சீன மருத்துவர்கள் விளக்கம்.
- IndiaGlitz, [Wednesday,March 18 2020]
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸானது இந்தியாவிலும் பரவியுள்ளது. கிட்டத்தட்ட 146 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரசுக்கு இதுவரை 2,06,845 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,272 பேர் இறந்துள்ளனர்.
சீனாவின் வூஹான் மாகாணத்தில் தொடங்கிய இந்த வைரசானது சீனாவை புரட்டிப் போட்டது. மருத்துவர்கள் மற்றும் சீன அரசானது கடுமையாக போராடி இந்த வைரஸினை அந்நாட்டில் ஓரளவிற்கு கட்டுப்படுத்தியுள்ளது. இந்நிலையில் 'ஏ' பிரிவு இரத்தம் உள்ளவர்களிடம் இந்த வைரஸ் தொற்று பாதிப்பு அதிகமாக தெரிந்ததாக சீன மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சார்ஸ் வைரஸும் 'ஏ' பிரிவு இரத்தம் இருந்தவர்களிடையே அதிக பாதிப்பு ஏற்படுத்தியது. வைரஸ் தொற்று எந்த வகை இரத்தம் இருந்தாலும் ஏற்படும் என்றாலும் 'ஏ' பிரிவு இரத்தம் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது என சீன மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இது முதல்கட்ட ஆராய்ச்சி என்பதால் பயப்பட தேவையில்லை அடுத்தடுத்த கட்டத்திற்கு ஆராய்ச்சி செல்லும் போது முடிவுகள் வேறுபடலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.